கூட்டணிக்கு சீமான் சிக்னல்? மெளனம் காக்கும் விஜய் - 2026-ல் இணைவார்களா?!
`எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது’ என அடித்து பேசும் சீமான், அண்மையில் அப்படி சொல்ல மறுத்திருக்கிறார். அதோடு விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக வரவேற்று பேசிவரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்கிறார்களா.. என அலசினோம். கடந்த மே 18-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், `தமிழக வெற்றிக் கழக தொடக்க விழா மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வீர்களா?' என கேட்கப்பட்டதற்கு, `பங்கேற்பேன்' என பதிலளித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையுமா? இருவரும் சேருவீர்களா என்ற கேள்விக்கு, ”விஜய் ஸ்டெய்லில் சொன்னால் `I'm Waiting`” என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். நா.த.க தலைமை அலுவலகம்இயல்பாக கூட்டணிக்கு செல்வீர்களா எனக் கேட்டால், சற்றும் யோசிக்காமல் `தனித்துதான் போட்டி என்பவர்’ இம்முறை அப்படி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீமானின் இதுபோன்ற பதில்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான சிக்னல் என பேசப்படுகிறது. `2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து தான் போட்டி' என 2024 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அறிவித்தார் சீமான். நா.த.க-வின் இரண்டாம்கட்ட நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேசும்போது, `தனித்து போட்டியிடுவது தான் எங்கள் அடையாளம், அப்படியே கூட்டணி அமைத்தாலும் அது சீமான் தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும், அதோடு தமிழ் தேசியம் மற்றும் நா.த.க-வின் அனைத்து கொள்கையையும் ஏற்கும் கட்சியில்தான் கூட்டணி’ எனப் பேசிவருகிறார்கள். சீமான்ஆனால் அண்மையில் சீமான் பேசியது, முன்பு பேசியதற்கு முற்றிலும் மாறாக அமைந்திருப்பது கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டோம், ``கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தியாக திகழவே விரும்புகிறோம். ஆட்சிப் பொறுப்பு வகித்த மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இருக்காது என அனுமானிக்கிறோம். மற்றபடி கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறோமா.. தனித்து போட்டியிடுகிறோமா.. என்பதெல்லாம் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். மாநாடு நடப்பது குறித்தும், நிகழ்வுக்கு யாரெல்லாம் அழைக்கப்படுகிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார் சுருக்கமாக. ஜெகதீஸ்வரன் ```விஜய் விரும்பினால், கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என பேச ஆரம்பித்த நா.த.க-வின் கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், ``விஜய் அரசியல் வருகையை முழு மனதுடன் வரவேற்கிறது நாம் தமிழர் கட்சி. அரசியல் கட்சிக்கான அறிவிப்பை விஜய் வெளியிட்ட அறிக்கையில் `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்ற கருத்தும், அடிப்படை அரசியல் மாற்றம் தேவை, திராவிட, தேசிய கட்சிகள் எதிர்ப்பு என நா.த.க-வின் கருத்தியலுக்கு ஒத்துப் போவதாகத்தான் அமைகிறது. சாட்டை துரைமுருகன்கொள்கை, கோட்பாடு கிட்டதட்ட ஒன்றாக இருக்கும்பட்சத்தில் நா.த.க-வும் விஜய்யும் இணைவதில் எந்த தவறுமில்லை என்பது பலரின் கருத்து. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் `கோட்` படத்தின் விசில் போடு பாடலின் மூலம் மறைமுக ஆதரவை நா.த.க-வுக்கு தெரிவித்திருந்தார் விஜய். நா.த.க-வுக்கு த.வெ.க-வுக்கு ஒரு புரிதல் இருப்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. அது கூட்டணியாக மாறுமா என்பது விஜய்யின் அரசியல் நகர்வுகளை பொறுத்தே அமையும். மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என அண்ணன் சீமான் சொல்லியிருகிறார். விஜய்யும் அண்ணன் சீமானும் விரைவில் சந்திக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிகின்றன” என்றார் சூசகமாக.நடிகர் விஜய்அரசியல் நோக்கர்கள் சிலரோ ``புதிதாக கட்சி தொடங்கும் விஜய் தனித்து நின்று தன் பலத்தை அறிந்து கொள்ளவே முயற்சிப்பார். அதில் சறுக்கல் ஏற்பட்டால் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி குறித்து யோசிக்கலாம். ஒருவேளை கணிசமான வெற்றியை முதல் தேர்தலிலேயே பெற்றாக வேண்டும் என முடிவெடுத்தால் மெகா கூட்டணியை அமைக்கலாமே தவிர சீமானுடன் மட்டும் அந்த கூட்டணி இருக்காது. மற்றொன்று ஆட்சியமைக்கும் ஆசையில் வரும் விஜய், சீமானின் தலைமையை ஏற்க துளியும் வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்தால் புஸ்ஸி ஆனந்தே விஜய்யை விட்டு விலகிவிடுவார். அதேபோல் தமிழ்தேசியம் கொள்கையை முன்னிறுத்தவும் வாய்ப்பில்லை. கூட்டணிக்கு சீமான் ஆசைப்படலாம், விஜய் ஆசைபடுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88''எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் வரக் கூடாது'' - விஜய் மீது சீமான் பாய்வது ஏன்?
`எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது’ என அடித்து பேசும் சீமான், அண்மையில் அப்படி சொல்ல மறுத்திருக்கிறார். அதோடு விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ச்சியாக வரவேற்று பேசிவரும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்கிறார்களா.. என அலசினோம்.
கடந்த மே 18-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், `தமிழக வெற்றிக் கழக தொடக்க விழா மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வீர்களா?' என கேட்கப்பட்டதற்கு, `பங்கேற்பேன்' என பதிலளித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையுமா? இருவரும் சேருவீர்களா என்ற கேள்விக்கு, ”விஜய் ஸ்டெய்லில் சொன்னால் `I'm Waiting`” என சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
இயல்பாக கூட்டணிக்கு செல்வீர்களா எனக் கேட்டால், சற்றும் யோசிக்காமல் `தனித்துதான் போட்டி என்பவர்’ இம்முறை அப்படி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீமானின் இதுபோன்ற பதில்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான சிக்னல் என பேசப்படுகிறது.
`2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்து தான் போட்டி' என 2024 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அறிவித்தார் சீமான். நா.த.க-வின் இரண்டாம்கட்ட நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேசும்போது, `தனித்து போட்டியிடுவது தான் எங்கள் அடையாளம், அப்படியே கூட்டணி அமைத்தாலும் அது சீமான் தலைமையிலான கூட்டணியாகத்தான் இருக்கும், அதோடு தமிழ் தேசியம் மற்றும் நா.த.க-வின் அனைத்து கொள்கையையும் ஏற்கும் கட்சியில்தான் கூட்டணி’ எனப் பேசிவருகிறார்கள்.
ஆனால் அண்மையில் சீமான் பேசியது, முன்பு பேசியதற்கு முற்றிலும் மாறாக அமைந்திருப்பது கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டோம், ``கட்சி கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தியாக திகழவே விரும்புகிறோம். ஆட்சிப் பொறுப்பு வகித்த மாநில கட்சிகளும், தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இருக்காது என அனுமானிக்கிறோம். மற்றபடி கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கிறோமா.. தனித்து போட்டியிடுகிறோமா.. என்பதெல்லாம் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். மாநாடு நடப்பது குறித்தும், நிகழ்வுக்கு யாரெல்லாம் அழைக்கப்படுகிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை” என்றார் சுருக்கமாக.
```விஜய் விரும்பினால், கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என பேச ஆரம்பித்த நா.த.க-வின் கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், ``விஜய் அரசியல் வருகையை முழு மனதுடன் வரவேற்கிறது நாம் தமிழர் கட்சி. அரசியல் கட்சிக்கான அறிவிப்பை விஜய் வெளியிட்ட அறிக்கையில் `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்ற கருத்தும், அடிப்படை அரசியல் மாற்றம் தேவை, திராவிட, தேசிய கட்சிகள் எதிர்ப்பு என நா.த.க-வின் கருத்தியலுக்கு ஒத்துப் போவதாகத்தான் அமைகிறது.
கொள்கை, கோட்பாடு கிட்டதட்ட ஒன்றாக இருக்கும்பட்சத்தில் நா.த.க-வும் விஜய்யும் இணைவதில் எந்த தவறுமில்லை என்பது பலரின் கருத்து. நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் `கோட்` படத்தின் விசில் போடு பாடலின் மூலம் மறைமுக ஆதரவை நா.த.க-வுக்கு தெரிவித்திருந்தார் விஜய். நா.த.க-வுக்கு த.வெ.க-வுக்கு ஒரு புரிதல் இருப்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிகிறது. அது கூட்டணியாக மாறுமா என்பது விஜய்யின் அரசியல் நகர்வுகளை பொறுத்தே அமையும். மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என அண்ணன் சீமான் சொல்லியிருகிறார். விஜய்யும் அண்ணன் சீமானும் விரைவில் சந்திக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிகின்றன” என்றார் சூசகமாக.
அரசியல் நோக்கர்கள் சிலரோ ``புதிதாக கட்சி தொடங்கும் விஜய் தனித்து நின்று தன் பலத்தை அறிந்து கொள்ளவே முயற்சிப்பார். அதில் சறுக்கல் ஏற்பட்டால் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி குறித்து யோசிக்கலாம். ஒருவேளை கணிசமான வெற்றியை முதல் தேர்தலிலேயே பெற்றாக வேண்டும் என முடிவெடுத்தால் மெகா கூட்டணியை அமைக்கலாமே தவிர சீமானுடன் மட்டும் அந்த கூட்டணி இருக்காது. மற்றொன்று ஆட்சியமைக்கும் ஆசையில் வரும் விஜய், சீமானின் தலைமையை ஏற்க துளியும் வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்தால் புஸ்ஸி ஆனந்தே விஜய்யை விட்டு விலகிவிடுவார். அதேபோல் தமிழ்தேசியம் கொள்கையை முன்னிறுத்தவும் வாய்ப்பில்லை. கூட்டணிக்கு சீமான் ஆசைப்படலாம், விஜய் ஆசைபடுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?