அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளுடன் வீடியோவை பகிர்ந்த மோடி - `இது முறையா பிரதமரே?!’

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது, சாதி குறித்த ஆட்சேபகரமான கருத்தை பெயர் குறிப்பிடாமல் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார் பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர்.அனுராக் தாக்கூர்சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதி பற்றிய அவரது பேச்சை, ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள், அனுராக் தாக்கூரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். கடும் சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூரின் பேச்சில் சாதி குறித்த கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரின் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடி தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘ஆற்றல் மிக்க என் இளம் நண்பரான அனுராக் தாக்கூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். அற்புதமான முறையில் நையாண்டியுடன் உண்மையைக் கலந்து, ‘இந்தியா’ கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.நரேந்திர மோடிநாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துவருகிறார். ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்விகளையும், வாதங்களையும் ராகுல் காந்தி முன்வைத்துவருகிறார்கள். இப்படியான சூழலில், ராகுல் காந்தியை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு எம்.பி., கடுமையாக விமர்சிப்பது பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆகவே, அந்த எம்.பி-யை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். பா.ஜ.க எம்.பி-யான அனுராக் தாக்கூரைப் பாராட்டுவது பிரதமர் மோடியின் உரிமை.ஆனால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய வீடியோவை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவை உரிமை மீறலில் பிரதமர் மோடி ஈடுபட்டிருப்பதாக பிரச்னை எழுந்திருக்கிறது. ராகுல் காந்திஇந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியத்திடம் பேசினோம். “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். எனவே, ராகுல் காந்தியின் கோரிக்கையைப் பரிசீலித்து, அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை.ஆனால், அந்த விஷயத்தை ஒரு கேலிப்பொருளாக மாற்றுவதும், ராகுல் காந்தியின் சாதி குறித்துப் பேசுவதும் கண்டனத்துக்குரியது. அதுவும், மத்திய அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூரின் அத்தகைய பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது. அவரது பேச்சை வரம்பு மீறிய செயலாகப் பார்க்கிறேன். ராமசுப்பிரமணியம்அவரது பேச்சை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். அந்தப் பேச்சை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அனுராக் தாக்கூரைப் பாராட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய ஒரு கருத்தை வெளியிடுவது அவை உரிமை மீறலாகும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?தேசியப் பேரிடராக அறிவிக்கப்படுமா வயநாடு நிலச்சரிவு? - விதிகள் சொல்வதென்ன?!பிரதமர் மோடி ஒன்றும் இப்போது புதிதாக பிரதமராகிவிடவில்லை. குஜராத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒரு கருத்தை வெளியிடக்கூடாது என்பது அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. அது, அவை உரிமையை மீறும் செயல் என்று தெரிந்தே வெளியிடுகிறார் என்றால் என்ன சொல்வது? பிரதமர் பதவிக்கான மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ராமசுப்பிரமணியம்.பிரதமர் மோடிபிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி-யும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இது தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், ``அவையிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவை நடத்தை விதி 222-ன் கீழ் உரிமையை மீறி உள்ளது. நடத்தை விதிகளின் படி இது உரிமை மீறலுக்கு சமம். இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமர் மோடி மீது அவை உரிமை மீறல் விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? அவை உரிமை மீறல் என்பது தெரிந்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறார் என்றால், நாடாளுமன்றத்தின் மீது அவர் என்ன மதிப்பு வைத்திருக்கிறார்? என்கிற கேள்வி எழுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Aug 2, 2024 - 10:14
 0  5
அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளுடன் வீடியோவை பகிர்ந்த மோடி - `இது முறையா பிரதமரே?!’

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. இந்த விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது, சாதி குறித்த ஆட்சேபகரமான கருத்தை பெயர் குறிப்பிடாமல் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார் பா.ஜ.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர்.

அனுராக் தாக்கூர்

சாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதி பற்றிய அவரது பேச்சை, ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி-க்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள், அனுராக் தாக்கூரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

கடும் சர்ச்சைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அனுராக் தாக்கூரின் பேச்சில் சாதி குறித்த கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் பிரதமர் மோடி, அனுராக் தாக்கூரின் பேச்சை வெகுவாகப் பாராட்டினார். பிரதமர் மோடி தனது சமூகவலைத்தளப் பக்கத்தில், ‘ஆற்றல் மிக்க என் இளம் நண்பரான அனுராக் தாக்கூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். அற்புதமான முறையில் நையாண்டியுடன் உண்மையைக் கலந்து, ‘இந்தியா’ கூட்டணியின் கறைபடிந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நரேந்திர மோடி

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துவருகிறார். ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்விகளையும், வாதங்களையும் ராகுல் காந்தி முன்வைத்துவருகிறார்கள். இப்படியான சூழலில், ராகுல் காந்தியை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒரு எம்.பி., கடுமையாக விமர்சிப்பது பிரதமர் மோடிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆகவே, அந்த எம்.பி-யை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். பா.ஜ.க எம்.பி-யான அனுராக் தாக்கூரைப் பாராட்டுவது பிரதமர் மோடியின் உரிமை.

ஆனால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய வீடியோவை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்ததுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அவை உரிமை மீறலில் பிரதமர் மோடி ஈடுபட்டிருப்பதாக பிரச்னை எழுந்திருக்கிறது.

ராகுல் காந்தி

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் ராமசுப்பிரமணியத்திடம் பேசினோம். “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலுவாகச் செயல்படத் தொடங்கிவிட்டார்கள். அவர்களின் கேள்விகளுக்கும், வாதங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் ஆட்சியாளர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.

சமூகநீதியை நிலைநாட்டுவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் பேசிவருகிறார். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். எனவே, ராகுல் காந்தியின் கோரிக்கையைப் பரிசீலித்து, அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை.

ஆனால், அந்த விஷயத்தை ஒரு கேலிப்பொருளாக மாற்றுவதும், ராகுல் காந்தியின் சாதி குறித்துப் பேசுவதும் கண்டனத்துக்குரியது. அதுவும், மத்திய அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூரின் அத்தகைய பேச்சை ஒருபோதும் ஏற்க முடியாது. அவரது பேச்சை வரம்பு மீறிய செயலாகப் பார்க்கிறேன்.

ராமசுப்பிரமணியம்

அவரது பேச்சை நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள். அந்தப் பேச்சை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, அனுராக் தாக்கூரைப் பாராட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவைக்குறிப்பிலிருந்து நீக்கிய ஒரு கருத்தை வெளியிடுவது அவை உரிமை மீறலாகும் என்பது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

பிரதமர் மோடி ஒன்றும் இப்போது புதிதாக பிரதமராகிவிடவில்லை. குஜராத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் பல ஆண்டுகள் இருந்தவர். கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாடாளுமன்ற அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒரு கருத்தை வெளியிடக்கூடாது என்பது அவருக்கு தெரியாமல் போக வாய்ப்பே இல்லை.

அது, அவை உரிமையை மீறும் செயல் என்று தெரிந்தே வெளியிடுகிறார் என்றால் என்ன சொல்வது? பிரதமர் பதவிக்கான மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயலாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ராமசுப்பிரமணியம்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி-யும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறார். இது தொடர்பான நோட்டீஸ் மக்களவை செயலாளரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், ``அவையிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளின் ஒரு பகுதியை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவை நடத்தை விதி 222-ன் கீழ் உரிமையை மீறி உள்ளது. நடத்தை விதிகளின் படி இது உரிமை மீறலுக்கு சமம். இதன் மூலம் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். எனவே, பிரதமர் மோடிக்கு எதிராக உரிமைமீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மீது அவை உரிமை மீறல் விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? அவை உரிமை மீறல் என்பது தெரிந்தும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிடுகிறார் என்றால், நாடாளுமன்றத்தின் மீது அவர் என்ன மதிப்பு வைத்திருக்கிறார்? என்கிற கேள்வி எழுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist