கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

நடிகர்  அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த  கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது

Feb 25, 2025 - 15:19
 0  6
கார் விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்

நடிகர் அஜித்குமார், கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார் ரேஸில் அவருடைய அணி பங்கேற்றது. அதற்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினார். அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தைப் பிடித்தது.

தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் அவர் பங்கேற்றுள்ளார். அங்குள்ள வெலன்சியா நகரில் நேற்று முன் தினம் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் தனக்கு முன்னால் சென்ற மற்றொரு காரை முந்துவதற்கு முயன்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist