காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு
மத்திய காசாவில் இன்று (வெள்ளி கிழமை) அதிகாலையில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதோடு காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல் அவில்: மத்திய காசாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே, காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், உலக தலைவர்கள் போர் நிறுத்ததுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இஸ்ரேல் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காசாவில் ஐ.நா நடத்தும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
What's Your Reaction?