ரஷ்யாவில் மருத்துவம் பயின்றுவந்த இந்திய மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி பலி
ரஷ்ய நாட்டில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் நடந்துள்ளது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் ரஷ்ய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
உயிரிழந்த நான்கு மாணவர்களில் இருவர் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் 18 முதல் 20 வயது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வெலிகி நோவ்கோரோட் (Veliky Novgorod) நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்துள்ளனர்.
What's Your Reaction?