கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மூவர் கைது

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் கூட்டாளி இந்தர்ஜித் சிங் கோசல் உட்பட 3 காலிஸ்தான் தீவிரவாதிகளை கனடா காவல்துறை கைது செய்துள்ளது. கனடா பாதுகாப்பு ஆலோசகர் நாத்தலி ட்ரோயின், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசிய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Sep 26, 2025 - 10:54
 0  8
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் மூவர் கைது

ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் கூட்டாளி இந்தர்ஜித் சிங் கோசல் உட்பட 3 காலிஸ்தான் தீவிரவாதிகளை கனடா காவல்துறை கைது செய்துள்ளது. கனடா பாதுகாப்பு ஆலோசகர் நாத்தலி ட்ரோயின், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசிய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபை சீக்கியர்களுக்கான தனி நாடாக உருவாக்க காலிஸ்தானி அமைப்பு முயன்று வருகிறது. இதற்காக இயங்கி வரும் நீதிக்கான சீக்கியர்கள் (Sikhs for Justice) அமைப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்தவாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுன், இந்த அமைப்புக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist