ரஷ்யாவை தவிர எங்கு வேண்டுமானாலும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்: அமெரிக்கா
இந்தியா உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தும் எண்ணெய் வாங்கலாம். ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: இந்தியா உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தும் எண்ணெய் வாங்கலாம். ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய கிறிஸ் ரைட், “உலகில் நிறைய எண்ணெய் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். எனவே, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தேவையில்லை. ரஷ்யாவின் எண்ணெய் மலிவானது என்பதால் இந்தியா அதை வாங்குகிறது. யாரும் ரஷ்ய எண்ணெயை வாங்க விரும்பவில்லை, இதனால் அவர்கள் அதை தள்ளுபடி விலையில் விற்கிறார்கள். மலிவான விலையில் எண்ணெயை வாங்க இந்தியா ஒரு சமரசம் செய்ய முடிவு செய்துள்ளது. அது ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லும் ஒருவருக்கு பணம் கொடுப்பதாகும்.
What's Your Reaction?







