எச்1பி விசா கட்டண தாக்கம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்
திறமையான இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.

திறமையான இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணம் ரூ.1.32 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அந்நாட்டு அரசு திடீரென உயர்த்தியது. இந்திய மென்பொறியாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் சேர்வதை தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது என கருதப்படுகிறது. அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அந்த நாட்டின் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?