ஓபன் AI + ஆப்பிள் கூட்டு | ஆப்பிள் சாதனங்களுக்கு எனது கம்பெனிகளில் தடை: மஸ்க் எச்சரிக்கை

ஆப்பிளின் டெவலப்பர் மாநாட்டில் (WWDC) ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் இணைவது குறித்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அது ஏனோ எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்கை ஈர்க்கவில்லை. மேலும், இது தொடர்பாக அவர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். 

Jun 11, 2024 - 12:20
 0  2
ஓபன் AI + ஆப்பிள் கூட்டு | ஆப்பிள் சாதனங்களுக்கு எனது கம்பெனிகளில் தடை: மஸ்க் எச்சரிக்கை

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிளின் டெவலப்பர் மாநாட்டில் (WWDC) ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் இணைவது குறித்து ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. அது ஏனோ எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்கை ஈர்க்கவில்லை. மேலும், இது தொடர்பாக அவர் எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

ஆப்பிள் நிறுவன சாதனங்களான ஐபோன், மேக் போன்றவற்றின் இயங்குதளத்தில் ‘ஓபன் ஏஐ’ டூல்கள் பயன்பாட்டுக்கு வந்தால், அந்த சாதனங்களை எனது நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிப்பேன் என தெரிவித்தார். இதனை ஆப்பிள் சிஇஓ டிம் குக், பகிர்ந்த ட்வீட்டில் பதில் ட்வீட் செய்து ம்ஸ்க் தெரிவித்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist