ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து துரோணா தேசாய் சாதனை

19 வயதுக்கு உட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகிறது

Sep 26, 2024 - 09:48
 0  3
ஒரே இன்னிங்ஸில் 498 ரன்கள் குவித்து துரோணா தேசாய் சாதனை

காந்திநகர்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான திவான் பல்லுபாய் கோப்பை கிரிக்கெட் தொடர் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் செயின்ட் சேவியர்ஸ் (லயோலா) - ஜேஎல் இங்கிலிஷ் பள்ளி அணிகள் ஷிவாய் மைதானத்தில் விளையாடின. இதில் செயின்ட் சேவியர்ஸ் அணிக்காக களமிறங்கிய 18 வயது பேட்ஸ்மேனான துரோணா தேசாய் 320 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 86 பவுண்டரிகளுடன் 498 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் துரோணா தேசாய், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இணைந்தார். இதற்கு முன்னர் மும்பையின் பிரணவ் தனவாடே (1009*), பிரித்வி ஷா (546), ஹவேவாலா (515), சமன்லால் (506*), அர்மான் ஜாபர் (498) ஆகியோரும் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை வேட்டையாடி இருந்தனர். துரோணா தேசாயின் அபாரமான ஆட்டத்தால் செயின்ட் சேவியர்ஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 712 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist