‘இந்தியாவைப் பாருங்கள்!’ - ஆஸி. கிரிக்கெட் லெஜண்ட்கள் பாராட்டு
“இது நிச்சயம் நல்ல விஷயமல்ல, அடுத்து டி20 தொடர் ஆரம்பிக்கிறதாம்” என்றார். எத்தனை ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல பார்மில், டச்சில் இருக்கிறார்கள் என்று கூற முடியவில்லை என்கிறார் ஆடம் கில்கிறிஸ்ட்.
ஆஸ்திரேலிய மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவை ஒருநாள் தொடரில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக முழு தொடரிலும் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரும் அரைசதமே எட்டவில்லை என்பதுதான் புதிய தாழ்வு நிலை என்று ஆஸி. ஊடகங்கள் அட்டாக்கில் இறங்கியுள்ளன. இந்நிலையில், இந்திய அணி ஒரே சமயத்தில் டெஸ்ட், ஏ அணி தொடர், தென் ஆப்பிரிக்காவில் டி20 தொடர் என்று களமிறக்குவதை ஆஸ்திரேலிய லெஜண்ட்கள் பாராட்டியுள்ளனர்.
பெர்த்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாட் கமின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் இல்லாமல் களமிறங்கி படுதோல்வி கண்டது ஆஸ்திரேலியா. இதனையடுத்து மார்க் வாஹ், பெர்னர்ட் ஜூலியன், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலிய அணித் தேர்வு, பார்டர் கவாஸ்கர் டிராபி சமயத்த்தில் பாகிஸ்தானுடன் ஒருநாள், டி20 தொடர்களை வைத்து இறுக்கமான பயண அட்டவணையை உருவாக்கியது என்று சாடியுள்ளனர்.
What's Your Reaction?