உலக செஸ் சாம்பியன்ஷிப்: 2-வது சுற்றை டிரா செய்த குகேஷ்!
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று 2-வது சுற்றில் இருவரும் மோதினார்கள். இதில் குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங் லிரென் வெள்ளை காய்களுடனும் விளையாடினார்கள். இந்த ஆட்டம் 23-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது சுற்று முடிவடைந்த பின்னர் குகேஷ் கூறும்போது,“தொடக்கத்தில் நான் ஆச்சரியப்பட்டேன். அதன் பின்னர் லிரெனுக்கு எந்த வாய்ப்புகளையும் வழங்கவில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கருப்பு காய்களுடன் விளையாடி டிரா செய்வது எப்போதும் நல்லது.
What's Your Reaction?