`இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!' 'கனிவு' காட்டும் மருத்துவத்துறை.. கண்டுகொள்ளாத முதல்வர்?

பிரபல யூடியூபர் இர்ஃபான், தன் மனைவியின் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை ஒரு விழாவாகவே நடத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தை அப்படியே புதைகுழிக்குள் புதைக்க நினைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. ஃபுட் விலாக் செய்து, மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் யூடியூபில் பிரபலமாக இருப்பவர் இர்ஃபான். யூடியூபர் இர்ஃபான்திருமணமான இவர், தன் மனைவி ஆலியா முதல்முறையாக கர்ப்பமான நிலையில், துபாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கே, அவர் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதையடுத்து, `Baby's Gender Inside' என்ற வாசகம் எழுதிய மருத்துவமனையின் பரிசோதனை முடிவு வைக்கப்பட்டிருந்த கவரின் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டார் இர்ஃபான். அப்போதே சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சில நாள்கள் கழித்து வெளிநாடுகளில் கொண்டாடப்படுவதைப் போல குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தினார். அந்த வீடியோவையும் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதோடு, சர்ச்சையையும் கிளப்பியது. `கருவிலிருக்கும் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி தவறு. இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கடும் விமர்சனங்களும் எழுந்தன.இர்ஃபான்பிறக்கும் குழந்தை ஆணா... பெண்ணா? பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்... நடவடிக்கை பாயுமா..?இதையடுத்து, `இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும்... அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்' என்று சீறியது, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.பரவாயில்லையே. சட்டத்தின் பாதுகாவலர்கள் விழித்தெழுந்து விட்டார்களே... என்று யோசித்தால், அடுத்த சிலநாள்கள் வீடியோ மற்றும் செய்தித்தாள்களில் இடம்பிடித்த இந்த விவகாரம், இப்போது கண் காணாமலேயே போய்விட்டது.இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ மகேஸ்வரனிடம் கேட்டபோது, ``இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிப்பது சட்டப்படி குற்றம். gender இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. `தெரியாமல் செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள். யூடியூப் பக்கத்தில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டு, விழிப்புணர்வு விடியோ வெளியிடுகிறேன்' என்று இர்ஃபான் தெரிவித்தார். தற்போது, அந்த வீடியோ நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.கொதிப்பு மேலிட, ``என்ன சார். இது சட்டப்படி தவறு என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, இதுதான் அவர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கையா?" என்று நாம் கேட்டதற்கு,``அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே... மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில் ஏ.ஓ. இருப்பார் அவரிடம் கேளுங்கள்" என்று சொல்லி முடித்துக் கொண்டார். சாதாராண மனிதர் யாராவது இதுபோன்ற குற்றங்களை இழைத்தால், உடனே பாய்ந்து, குதறி எடுக்கும் அரசுத் துறைகள், இர்ஃபான் விஷயத்தில் `மன்னிப்புக் கடிதம்' என்று சொல்லி, விவகாரத்தை திசைத் திருப்பிக்கொண்டிருக்கின்றன.செயற்பாட்டாளரும் மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்Irfan: கருவின் பாலின விவரம் வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீது தமிழக அரசு நடவடிக்கை!இதுகுறித்து, மருத்துவ செயற்பாட்டாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசியபோது, ``பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்காகவே இந்தியாவில், `பாலின தேர்வைத் தடை செய்தல்' சட்டம் கொண்டுவரப்பட்டது. ஸ்கேன் சென்டரில் இருப்பவரோ, மருத்துவரோ, வேறு யாருமோ குழந்தையின் பாலினத்தை வெளியில் சொன்னால், 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மருத்துவராக இருக்கும்பட்சத்தில், அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்படும்.சட்டப்படி மட்டுமல்லாமல்... நியாயப்படியும் அனைவரும் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தற்போதுதான், பெண் குழந்தைகள் தத்தித்தத்தி முன்னேறிக்கொண்டுள்ளனர். ஆனால், அதையும் குலைக்கப் பார்க்கிறார்கள். சட்டத்தை மீறுவது அறமற்ற செயலே. இர்ஃபான், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பலருக்கும் தவறான முன்மாதிரியாக மாறிவிட்டார். இதைப் பார்த்து பலர் துபாய்க்குச் சென்று குழந்தையின் பாலினத்தை அறிந்து, பெண்சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இர்ஃபானை சமூக வலைதளத்தில் பின்பற்றுபவர்களில் பலர் இந்தியர்கள்தான். என்னதான் அவர் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சமூகப் பொறுப்போடு நடந்துகொண்டிருக்க வேண்டும்.இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு சமூகவலைதளங்களையும் அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்" என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.ஆக... சட்டவிதிகள் தெளிவாகவே இருக்கின்றன. ஆனால், இர்ஃபான் போன்ற பிரபலங்கள் அதைச் செய்யும்போது, `காக்காய் இத்தூணூண்டு ஆய் போனது குத்தமா?' என்கிற ரேஞ்சுக்கு விஷயத்தையே மறைக்கப் பார்ப்பது மாபெரும் குற்றமே. இத்தகைய குற்றத்துக்குத் துணைபோகும் மருத்துவத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.`சட்டம் தெரியாது... மன்னிப்பு கேட்கிறேன்... வீடியோவை நீக்கிவிட்டேன்... விழிப்புணர்வு வீடியோ போடுகிறேன்' என்பதெல்லாம் இர்ஃபான் போன்றவர்களுக்கு அழகாகத் தெரியவில்

May 28, 2024 - 12:43
 0  5
`இர்ஃபான்தான் மன்னிப்பு கேட்டுட்டாரே..!' 
'கனிவு' காட்டும் மருத்துவத்துறை..
கண்டுகொள்ளாத முதல்வர்?

பிரபல யூடியூபர் இர்ஃபான், தன் மனைவியின் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, அதை ஒரு விழாவாகவே நடத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தை அப்படியே புதைகுழிக்குள் புதைக்க நினைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளன. ஃபுட் விலாக் செய்து, மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்ஸ்களுடன் யூடியூபில் பிரபலமாக இருப்பவர் இர்ஃபான்.

யூடியூபர் இர்ஃபான்

திருமணமான இவர், தன் மனைவி ஆலியா முதல்முறையாக கர்ப்பமான நிலையில், துபாய்க்கு அழைத்துச் சென்றார். அங்கே, அவர் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதையடுத்து, `Baby's Gender Inside' என்ற வாசகம் எழுதிய மருத்துவமனையின் பரிசோதனை முடிவு வைக்கப்பட்டிருந்த கவரின் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டார் இர்ஃபான்.

அப்போதே சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், சில நாள்கள் கழித்து வெளிநாடுகளில் கொண்டாடப்படுவதைப் போல குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்தினார். அந்த வீடியோவையும் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதோடு, சர்ச்சையையும் கிளப்பியது. `கருவிலிருக்கும் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி தவறு. இர்ஃபான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இர்ஃபான்

இதையடுத்து, `இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும்... அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும்' என்று சீறியது, தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை.

பரவாயில்லையே. சட்டத்தின் பாதுகாவலர்கள் விழித்தெழுந்து விட்டார்களே... என்று யோசித்தால், அடுத்த சிலநாள்கள் வீடியோ மற்றும் செய்தித்தாள்களில் இடம்பிடித்த இந்த விவகாரம், இப்போது கண் காணாமலேயே போய்விட்டது.

இதுகுறித்து, தமிழக அரசின் மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ மகேஸ்வரனிடம் கேட்டபோது, ``இந்தியாவில் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிவிப்பது சட்டப்படி குற்றம்.

gender

இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. `தெரியாமல் செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள். யூடியூப் பக்கத்தில் இருந்து வீடியோவை நீக்கிவிட்டு, விழிப்புணர்வு விடியோ வெளியிடுகிறேன்' என்று இர்ஃபான் தெரிவித்தார். தற்போது, அந்த வீடியோ நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்த அறிக்கையும் அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது” என்று சர்வசாதாரணமாகச் சொன்னார்.

கொதிப்பு மேலிட, ``என்ன சார். இது சட்டப்படி தவறு என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியிருக்கும்போது, இதுதான் அவர் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கையா?" என்று நாம் கேட்டதற்கு,

``அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே... மேற்கொண்டு எதுவாக இருந்தாலும் எங்கள் அலுவலகத்தில் ஏ.ஓ. இருப்பார் அவரிடம் கேளுங்கள்" என்று சொல்லி முடித்துக் கொண்டார். சாதாராண மனிதர் யாராவது இதுபோன்ற குற்றங்களை இழைத்தால், உடனே பாய்ந்து, குதறி எடுக்கும் அரசுத் துறைகள், இர்ஃபான் விஷயத்தில் `மன்னிப்புக் கடிதம்' என்று சொல்லி, விவகாரத்தை திசைத் திருப்பிக்கொண்டிருக்கின்றன.

செயற்பாட்டாளரும் மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்

இதுகுறித்து, மருத்துவ செயற்பாட்டாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ரவீந்திரநாத்திடம் பேசியபோது, ``பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்காகவே இந்தியாவில், `பாலின தேர்வைத் தடை செய்தல்' சட்டம் கொண்டுவரப்பட்டது. ஸ்கேன் சென்டரில் இருப்பவரோ, மருத்துவரோ, வேறு யாருமோ குழந்தையின் பாலினத்தை வெளியில் சொன்னால், 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மருத்துவராக இருக்கும்பட்சத்தில், அவருடைய மருத்துவ பதிவும் ரத்து செய்யப்படும்.

சட்டப்படி மட்டுமல்லாமல்... நியாயப்படியும் அனைவரும் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தற்போதுதான், பெண் குழந்தைகள் தத்தித்தத்தி முன்னேறிக்கொண்டுள்ளனர். ஆனால், அதையும் குலைக்கப் பார்க்கிறார்கள். சட்டத்தை மீறுவது அறமற்ற செயலே. இர்ஃபான், சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு பலருக்கும் தவறான முன்மாதிரியாக மாறிவிட்டார். இதைப் பார்த்து பலர் துபாய்க்குச் சென்று குழந்தையின் பாலினத்தை அறிந்து, பெண்சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இர்ஃபானை சமூக வலைதளத்தில் பின்பற்றுபவர்களில் பலர் இந்தியர்கள்தான். என்னதான் அவர் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சமூகப் பொறுப்போடு நடந்துகொண்டிருக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு சமூகவலைதளங்களையும் அரசு கண்காணிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்" என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

ஆக... சட்டவிதிகள் தெளிவாகவே இருக்கின்றன. ஆனால், இர்ஃபான் போன்ற பிரபலங்கள் அதைச் செய்யும்போது, `காக்காய் இத்தூணூண்டு ஆய் போனது குத்தமா?' என்கிற ரேஞ்சுக்கு விஷயத்தையே மறைக்கப் பார்ப்பது மாபெரும் குற்றமே. இத்தகைய குற்றத்துக்குத் துணைபோகும் மருத்துவத் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

`சட்டம் தெரியாது... மன்னிப்பு கேட்கிறேன்... வீடியோவை நீக்கிவிட்டேன்... விழிப்புணர்வு வீடியோ போடுகிறேன்' என்பதெல்லாம் இர்ஃபான் போன்றவர்களுக்கு அழகாகத் தெரியவில்லை. `சட்டம் தெரியாது' என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது என்று சட்டத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. ஆக, தமிழகத்தின் பிரபலங்கள் தொடங்கி, மாநிலத்தின் முதல் குடிமகன் வரை அனைத்துத் தரப்பு பிரபலங்களுடனும் நட்பில் இருக்கும் இர்ஃபான் போன்ற வலைதளவாதிக்கு இதெல்லாம் தெரியாது என்பது, சட்டத்தையும் அரசமைப்பையும் மக்களையும் கேலிக்குள்ளாக்கும் செயலே!

இர்ஃபான் ஆளுநருடன்

பெண் குழந்தைகளைப் போற்றுவோம்... பெண் கல்வியே முக்கியம்... பெண்களுக்கான படிப்புக்காக பணம் கொடுக்கிறோம்.. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து கொடுக்கிறோம் என்பதையெல்லாம் மேடைக்கு மேடை பெருமையாகப் பேசிக்கொண்டே இருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `கருவிலிருக்கும் குழந்தை பெண்' என்பதை விதிகளை மீறி அறிவித்ததைக் கண்டுகொள்ளாமல், `கனிவு' காட்டப்படுவதைக் கண்டும்காணாமலுமேதான் தொடர்ந்து இருக்கப் போகிறாரா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist