`இரண்டு மனைவி இருந்தால் ரூ.2 லட்சம்!' - காங்கிரஸ் வேட்பாளர் சர்ச்சை பேச்சு... நடவடிக்கை கோரும் பாஜக
காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு, நீட், க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் வசம் ஒப்படைத்தல் போன்ற அறிவிப்புகளுடன் மகாலட்சுமி திட்டமும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மகாலட்சுமி திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள நிலையிலிருந்து உயரும் வரையில் அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.8,500 என ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது.Congress Manifesto | காங்கிரஸ் தேர்தல் அறிக்கைஇந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா, இந்தத் திட்டத்தைத் தொடர்புபடுத்தி இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் என கூறியிருப்பது, பா.ஜ.க-விடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.சைலானா பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் பூரியா, ``எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அது அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது, இரண்டு மனைவிகளைக் கொண்ட நபராக இருந்தாலும், அந்த இருவரும் அதன் கீழ் வருவார்கள்" என்றார்.காந்திலால் பூரியாமேலும், இதே மேடையில் பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, ``இரண்டு மனைவிகள் உள்ள ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று பூரியா இப்போது ஒரு பயங்கர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்" என்று பேசினார்.இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் மத்தியப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, காந்திலால் பூரியா பேசும் வீடியோவை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, தேர்தல் ஆணையம் இதைக் கவனித்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbஅதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்!
காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு, நீட், க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் வசம் ஒப்படைத்தல் போன்ற அறிவிப்புகளுடன் மகாலட்சுமி திட்டமும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த மகாலட்சுமி திட்டத்தின்கீழ், ஏழைக் குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள நிலையிலிருந்து உயரும் வரையில் அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ரூ.8,500 என ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறுகிறது.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் பூரியா, இந்தத் திட்டத்தைத் தொடர்புபடுத்தி இரண்டு மனைவி இருந்தால் ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் என கூறியிருப்பது, பா.ஜ.க-விடமிருந்து விமர்சனத்தைத் தூண்டியிருக்கிறது.
சைலானா பகுதியில் நேற்று நடைபெற்ற பேரணியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் பூரியா, ``எங்கள் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அது அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இது, இரண்டு மனைவிகளைக் கொண்ட நபராக இருந்தாலும், அந்த இருவரும் அதன் கீழ் வருவார்கள்" என்றார்.
மேலும், இதே மேடையில் பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, ``இரண்டு மனைவிகள் உள்ள ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி இரட்டிப்பாக வழங்கப்படும் என்று பூரியா இப்போது ஒரு பயங்கர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்" என்று பேசினார்.
இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் மத்தியப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா, காந்திலால் பூரியா பேசும் வீடியோவை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, தேர்தல் ஆணையம் இதைக் கவனித்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?