இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 உயிரிழப்பு

இந்தோனேசிய நாட்டின் சுலாவெசி தீவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 45 பேர் மாயமாகி உள்ளனர். இந்த சம்பவம் அங்குள்ள கோரோண்டாலோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்டுள்ளது. 

Jul 8, 2024 - 22:15
 0  0
இந்தோனேசியாவின் சட்டவிரோத தங்க சுரங்கத்தில் மண் சரிந்து 11 உயிரிழப்பு

சுலாவெசி: இந்தோனேசிய நாட்டின் சுலாவெசி தீவில் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 45 பேர் மாயமாகி உள்ளனர். இந்தச் சம்பவம் அங்குள்ள கோரோண்டாலோ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்டுள்ளது. இதில் சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமல்லாது அதன் அருகில் உள்ள வசித்து வந்த மக்களும் உயிரிழந்தனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மாயமாகி உள்ளவர்களை தேடும் பணியில் ராணுவம், காவல் துறை, மீட்பு படையினர் என மொத்தம் 164 ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு படையினர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. மழை தொடர்வதாலும், சாலை சேற்றினால் சூழப்பட்டு இருப்பதும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்திரத்தை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்வதற்கான சாதகம் இருந்தால் மட்டுமே அந்த பணி நடக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist