`இந்து மக்கள் தொகை வீழ்ச்சி.. முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்வு?’ - ‘திடீர்’ ஆய்வு முடிவும் பின்னணியும்!

இந்தியாவின் மக்கள்தொகை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை திடீரென வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களின் மக்கள்தொகை 1950-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுவரை 84.68 சதவிகிதத்திலிருந்து 78.06 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த அறிக்கை.மக்கள்தொகை அதன்படி, இந்துக்களின் எண்ணிக்கையில் 7.82 சதவிகிதம் சரிவு என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதே வேளையில், 1950-ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 9.84 சதவிகிதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 14.09 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்றும் கூறும் அந்த ஆய்வறிக்கை, ‘முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இது 43.15 சதவிகித உயர்வு’ என்கிறது.‘மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு - நாடு தழுவிய பகுப்பாய்வு (1950 - 2015) என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷாமிகா ரவி தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில்தான், இந்துக்களின் எண்ணிக்கை சரிந்திருப்பதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மக்கள்தொகை மேலும், ‘கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24 சதவிகிதத்திலிருந்து 2.36 சதவிகிதமாகவும், சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவிகிதத்திலிருந்து 1.85 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. சமண மதத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவிகிதத்திலிருந்து 0.36 சதவிகிதமாகவும், பார்சி மதத்தினரின் எண்ணிக்கை 0,03 சதவிகிதத்திலிருந்து 0.004 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வறிக்கை.தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வறிக்கையால், தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ‘முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு சட்டவிரோதமானது’, ‘ஊடுருவல்காரர்கள்’, ‘அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள்’ என்றெல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முஸ்லிம்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். மக்கள் தொகை கணக்கெடுப்புஇந்த நேரத்தில், இப்படியொரு ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. உடனே, முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு. ‘நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில், இதுபோன்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு, மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.‘மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. 2020-21 ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தவில்லை. மாறாக, மக்களை மதரீதியாகப் பிளவை உருவாக்கி, தேர்தலில் வாக்குகளைப் பெற பா.ஜ.க முயல்கிறது’ என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.புலம்பெயர் தொழிலாளர்கள்இந்தியாவில் வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை மூடிமறைக்க முயன்றதாக சில ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ‘கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், நாட்டில் நிலவும் வறுமை பற்றிய புள்ளிவிவரங்கள் என நாட்டின் முக்கியமான பிரச்னைகள் குறித்த தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை. ஆனால், மதரீதியிலான தரவுகளை மட்டும் எப்படி அரசு சேகரித்தது?’ என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ‘முஸ்லிம்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு இந்த ஆய்வறிக்கை வலுச்சேர்க்கும் வகையில் இருக்கும்’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.அதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்!பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆய்வறிக்கை வெளியானதும், அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், புள்ளிவிவரங்கள் குறித்து இந்திய மக்கள்தொகை ஃபவுண்டேஷன் (The Population Foundation of India - PFI) என்ற அமைப்பு கவலை தெரிவித்தது. இந்த அமைப்பு, மக்கள் தொகை உயர்வு, பாலின ஆரோக்கியம் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டுவரும் ஒரு சுயேச்சையான அமைப்பாகும்.பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா‘பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் ஆய்வறிக்கை குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து தவறாக செய்தி வெளியிடப்படுகிறது. அது சரியான புள்ளிவிவரம் கிடையாதது. அது மட்டுமின்றி, எவ்வித அடிப்படையும் இல்லாமல் தவறான செய்தியைப் பரப்புவதாகும்’ என்று பி.எஃப்.ஐ-யின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்தெர்ஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

May 10, 2024 - 17:18
 0  2
`இந்து மக்கள் தொகை வீழ்ச்சி.. முஸ்லிம்கள் எண்ணிக்கை உயர்வு?’ - ‘திடீர்’ ஆய்வு முடிவும் பின்னணியும்!

இந்தியாவின் மக்கள்தொகை குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கை திடீரென வெளியிடப்பட்டு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களின் மக்கள்தொகை 1950-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டுவரை 84.68 சதவிகிதத்திலிருந்து 78.06 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த அறிக்கை.

மக்கள்தொகை

அதன்படி, இந்துக்களின் எண்ணிக்கையில் 7.82 சதவிகிதம் சரிவு என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதே வேளையில், 1950-ம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையில் 9.84 சதவிகிதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 14.09 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது என்றும் கூறும் அந்த ஆய்வறிக்கை, ‘முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இது 43.15 சதவிகித உயர்வு’ என்கிறது.

‘மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு - நாடு தழுவிய பகுப்பாய்வு (1950 - 2015) என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷாமிகா ரவி தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதில்தான், இந்துக்களின் எண்ணிக்கை சரிந்திருப்பதாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மக்கள்தொகை

மேலும், ‘கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.24 சதவிகிதத்திலிருந்து 2.36 சதவிகிதமாகவும், சீக்கியர்களின் எண்ணிக்கை 1.24 சதவிகிதத்திலிருந்து 1.85 சதவிகிதமாகவும் அதிகரித்திருக்கிறது. சமண மதத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவிகிதத்திலிருந்து 0.36 சதவிகிதமாகவும், பார்சி மதத்தினரின் எண்ணிக்கை 0,03 சதவிகிதத்திலிருந்து 0.004 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வறிக்கை.

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வறிக்கையால், தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, ‘முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு சட்டவிரோதமானது’, ‘ஊடுருவல்காரர்கள்’, ‘அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொள்பவர்கள்’ என்றெல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முஸ்லிம்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்த நேரத்தில், இப்படியொரு ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. உடனே, முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிக்கிறது என்றும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்றும் பா.ஜ.க தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு. ‘நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நேரத்தில், இதுபோன்ற ஆய்வறிக்கையை வெளியிட்டு, மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

‘மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. 2020-21 ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்திய அரசு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தவில்லை. மாறாக, மக்களை மதரீதியாகப் பிளவை உருவாக்கி, தேர்தலில் வாக்குகளைப் பெற பா.ஜ.க முயல்கிறது’ என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்தியாவில் வேலையின்மை தொடர்பான புள்ளிவிவரங்களை மூடிமறைக்க முயன்றதாக சில ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ‘கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், நாட்டில் நிலவும் வறுமை பற்றிய புள்ளிவிவரங்கள் என நாட்டின் முக்கியமான பிரச்னைகள் குறித்த தரவுகள் எதுவும் அரசிடம் இல்லை. ஆனால், மதரீதியிலான தரவுகளை மட்டும் எப்படி அரசு சேகரித்தது?’ என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ‘முஸ்லிம்களுக்கு எதிரான பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு இந்த ஆய்வறிக்கை வலுச்சேர்க்கும் வகையில் இருக்கும்’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு ஆய்வறிக்கை வெளியானதும், அந்த ஆய்வறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், புள்ளிவிவரங்கள் குறித்து இந்திய மக்கள்தொகை ஃபவுண்டேஷன் (The Population Foundation of India - PFI) என்ற அமைப்பு கவலை தெரிவித்தது. இந்த அமைப்பு, மக்கள் தொகை உயர்வு, பாலின ஆரோக்கியம் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டுவரும் ஒரு சுயேச்சையான அமைப்பாகும்.

பிரதமர் மோடி | தேர்தல் திருவிழா

‘பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் ஆய்வறிக்கை குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்து தவறாக செய்தி வெளியிடப்படுகிறது. அது சரியான புள்ளிவிவரம் கிடையாதது. அது மட்டுமின்றி, எவ்வித அடிப்படையும் இல்லாமல் தவறான செய்தியைப் பரப்புவதாகும்’ என்று பி.எஃப்.ஐ-யின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்தெர்ஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist