ஆப்ரிக்க அமெரிக்கரான விமானப்படை அதிகாரியை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ் - நடந்தது என்ன?!
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கார் விபத்து ஒன்றில் சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்க அமெரிக்க நபரைப் பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் தாக்கியதில், அந்த ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த நிலையில், அதே அமெரிக்காவில் தவறான அடுக்குமாடிக்குள் புகுந்த புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி, அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் 23 வயது ஆப்ரிக்க அமெரிக்க அதிகாரியைச் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்க விமானப்படை அதிகாரி ஃபோர்ட்சன்மே 3-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பெயர் ஃபோர்ட்சன் (Fortson). இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, போலீஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர் பென் க்ரம்ப் (Ben Crump), வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.மேலும், அன்று நடந்த சம்பவத்தை விளக்கிய பென் க்ரம்ப், ``சம்பவம் நடந்த அன்று ஃபோர்ட்சன் தனது குடியிருப்பில் ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோகால் செயலில் தன் காதலியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, கதவை யாரோ பலமாகத் தட்டவே, ஃபோர்ட்சனின் காதலி யாரென்று கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, ஃபோர்ட்சன் யாரென்று குரலெழுப்பியபோது எந்தப் பதிலும் வரவில்லை. கதவின் துளை வழியாகப் பார்த்தபோதும் வெளியில் யாரும் தெரியவில்லை.அமெரிக்க விமானப்படை அதிகாரி ஃபோர்ட்சன்பின்னர், ஃபோர்ட்சன் தன்னுடைய பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது, புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி துப்பாக்கியுடன் முன்வர, அந்த இளைஞன் அப்படியே பின்வாக்கில் நகர்ந்தார். அதுவரையிலும் வீடியோகால் செயலியில் இணைப்பில் இருந்த அவரின் காதலிக்கு ஆறு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இறுதியில், ஃபோர்ட்சன் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கில், ஒரு நல்ல மனிதருக்கான நீதி கிடைக்க வெளிப்படையான விசாரணை வேண்டும்'' என்றார்.துப்பாக்கி சூடு இருப்பினும், ஒகலூசா கவுண்டி (Okaloosa County) ஷெரிப் அலுவலகத்தின் ஷெரிஃப் எரிக் ஏடன் (Eric Aden), `அந்த இளைஞன் துப்பாக்கியுடன் இருந்ததால் போலீஸ் அதிகாரியால் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. இதில், காயமடைந்த அந்த அதிகாரி இளைஞரைச் சுட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். இதனால், புளோரிடா சட்ட அமலாக்கத்துறை மற்றும் மாநில வழக்கறிஞர் அலுவலகம் இதில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கார் விபத்து ஒன்றில் சந்தேகத்தின் பேரில் ஆப்ரிக்க அமெரிக்க நபரைப் பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரிகள் தாக்கியதில், அந்த ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்த நிலையில், அதே அமெரிக்காவில் தவறான அடுக்குமாடிக்குள் புகுந்த புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி, அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் 23 வயது ஆப்ரிக்க அமெரிக்க அதிகாரியைச் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மே 3-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பெயர் ஃபோர்ட்சன் (Fortson). இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, போலீஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர் பென் க்ரம்ப் (Ben Crump), வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
மேலும், அன்று நடந்த சம்பவத்தை விளக்கிய பென் க்ரம்ப், ``சம்பவம் நடந்த அன்று ஃபோர்ட்சன் தனது குடியிருப்பில் ஃபேஸ்டைம் (FaceTime) வீடியோகால் செயலில் தன் காதலியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, கதவை யாரோ பலமாகத் தட்டவே, ஃபோர்ட்சனின் காதலி யாரென்று கேட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து, ஃபோர்ட்சன் யாரென்று குரலெழுப்பியபோது எந்தப் பதிலும் வரவில்லை. கதவின் துளை வழியாகப் பார்த்தபோதும் வெளியில் யாரும் தெரியவில்லை.
பின்னர், ஃபோர்ட்சன் தன்னுடைய பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தபோது, புளோரிடா ஷெரிப்பின் துணை போலீஸ் அதிகாரி துப்பாக்கியுடன் முன்வர, அந்த இளைஞன் அப்படியே பின்வாக்கில் நகர்ந்தார். அதுவரையிலும் வீடியோகால் செயலியில் இணைப்பில் இருந்த அவரின் காதலிக்கு ஆறு முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இறுதியில், ஃபோர்ட்சன் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கில், ஒரு நல்ல மனிதருக்கான நீதி கிடைக்க வெளிப்படையான விசாரணை வேண்டும்'' என்றார்.
இருப்பினும், ஒகலூசா கவுண்டி (Okaloosa County) ஷெரிப் அலுவலகத்தின் ஷெரிஃப் எரிக் ஏடன் (Eric Aden), `அந்த இளைஞன் துப்பாக்கியுடன் இருந்ததால் போலீஸ் அதிகாரியால் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாயிற்று. இதில், காயமடைந்த அந்த அதிகாரி இளைஞரைச் சுட்டார்" என்று தெரிவித்திருக்கிறார். இதனால், புளோரிடா சட்ட அமலாக்கத்துறை மற்றும் மாநில வழக்கறிஞர் அலுவலகம் இதில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
What's Your Reaction?