``ஆடிட்ல என்ன சொல்லப்போறாங்கன்னு...'' - சி.ஏ.ஜியின் நிகழ்ச்சியில் அப்பாவு
அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.’நான் ஒரு சாதாரண வாத்தியார். தேர்தல்ல நின்னு சட்டசபைக்குப் போனப்பதான் ‘அரசின் நலத்திட்டம் சரியா செயல்படலைனா, ஆடிட்ல அப்ஜெக்ஷன் பண்ணுவாங்க, பத்தி எழுதுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்பக் கூட ’ஆடிட்ல என்ன சொல்லப் போறாங்கன்’னு சாதாரணமாப் பதில் கேள்வி கேட்டிருக்கேன். ஆனா தணிக்கைத் துறை சட்டசபையில வைக்கிற அறிக்கையை ஒரு தடவை படிச்சுப் பார்த்த பிறகுதான், இந்த ஆபீஸ் பத்தியும் இவங்க செய்யற வேலை பத்தியும் நல்லாத் தெரிஞ்சுகிட்டேன்’ என விழாவில் பேசிய அப்பாவு, கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதல் செய்ததில் அரசுக்கு நஷ்டம் உண்டானதாகச் சொன்ன தணிக்கைத் துறை அறிக்கையையும் சுட்டிக்காட்டினார்.முன்னதாக ’மத்திய அரசின் ஒரு துறைங்கிற அளவுல மட்டுமே இந்த டிபார்ட்மென்ட் பத்திப் பலருக்கும் தெரியுது. தபால் துறை, ரயில்வே மாதிரி மக்கள்கிட்ட நேரடி தொடர்பு இல்லாத்தால மக்களுக்கு அவ்வளவா இந்த ஆபிஸ் பத்தி தெரியலைனும் சிலர் சொல்றாங்க. தேர்தல் கமிஷன் போல கணக்குத் தணிக்கைத் துறைங்கிறது தன்னிச்சையான ஒரு அமைப்பு என்பதும் அரசியலமைப்புச் சட்டமே இதுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியிருக்கு எனவும் பலருக்கும் தெரியறதில்லை’ எனப் பேசினார் தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் கே.பி. ஆனந்த்.சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மாநிலக் கணக்காயர் அலுவலகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கரகம், ஒயிலாட்டம், என கலை நிகழ்ச்சிகள் பல நடந்தேற உற்சாகமாகத் திரண்டிருந்த அதன் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.‘’பிரிட்டிஷ் இந்திய அரசில் அதாவது 1860-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இங்க முதல் தணிக்கை அதிகாரி பதவி ஏற்றிருக்கிறார். அதனை நினைவுகூறும் விதமாகத்தான் இந்த ‘ஆடிட் வீக்’. முன்னாடில்லாம் எங்க அலுவலக வளாகத்துக்குள் சிம்பிளா செலிபிரேட் செய்துட்டு விட்டுடுவோம். ஆனா சமீபமா எங்கப் பணிகள் பத்திப் பொதுமக்களும் அவசியம் தெரிஞ்சுக்க வேணும்னு நினைக்கிறோம். அதனாலதான் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் எல்லாம்.மக்கள் இந்த ஆபீஸ் பத்தி ஏன் தெரிஞ்சுக்கணும்னா, ஜனநாயகத்துல முக்கியமான ஒரு அங்கம் இந்த ஆபீஸ். மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தங்களுடைய வருமானத்தை மக்களின் திட்டங்களுக்காகச் சரியான முறையில் செலவு செய்கிறதாங்கிறதைக் கண்காணிக்கிறதே நாங்கதான்.அரசுத் துறை தவிர அரசின் பொத்துறை நிறுவன வரவு செலவுகளுமே எங்க கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும். ஒவ்வொரு வருஷமும் வரவு செலவுகளை ஆராய்ஞ்சு முதல்ல சி.ஏ.ஜி.ங்கிற எங்க தலைமை அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிட்டு அதன்பிறகு மாநில அளவுல கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி அதன்பிறகே சட்டசபையில அந்த அறிக்கை வைக்கப்பட்டு பொதுவெளிக்கு வருது’’ என்கின்றனர் இவர்கள்.ஆடிட் வீக்சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரையில் நாட்டில் நடந்த பல ஊழல்கள், நிதிமுறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறதாம் இந்தியத் தணிக்கைத் துறை.’சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டானது சில நேரங்களில் மத்தியிலும் மாநிலங்களிலும் பல ஆட்சி மாற்றங்களுக்குக் காரணமாகியிருக்கிறது’ என்கிறார்கள்.
அக்கவுன்டன்ட் ஜெனரல் எனப்படும் இந்திய கணக்குத் தணிக்கைத் துறை ஆண்டுதோறும் நவம்பர் மூன்றாவது வாரத்தில் கொண்டாடும் ’தணிக்கை வார’ விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் எம்.அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் மற்றும் கே.செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
’நான் ஒரு சாதாரண வாத்தியார். தேர்தல்ல நின்னு சட்டசபைக்குப் போனப்பதான் ‘அரசின் நலத்திட்டம் சரியா செயல்படலைனா, ஆடிட்ல அப்ஜெக்ஷன் பண்ணுவாங்க, பத்தி எழுதுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்பக் கூட ’ஆடிட்ல என்ன சொல்லப் போறாங்கன்’னு சாதாரணமாப் பதில் கேள்வி கேட்டிருக்கேன். ஆனா தணிக்கைத் துறை சட்டசபையில வைக்கிற அறிக்கையை ஒரு தடவை படிச்சுப் பார்த்த பிறகுதான், இந்த ஆபீஸ் பத்தியும் இவங்க செய்யற வேலை பத்தியும் நல்லாத் தெரிஞ்சுகிட்டேன்’ என விழாவில் பேசிய அப்பாவு, கடந்த அதிமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதல் செய்ததில் அரசுக்கு நஷ்டம் உண்டானதாகச் சொன்ன தணிக்கைத் துறை அறிக்கையையும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக ’மத்திய அரசின் ஒரு துறைங்கிற அளவுல மட்டுமே இந்த டிபார்ட்மென்ட் பத்திப் பலருக்கும் தெரியுது. தபால் துறை, ரயில்வே மாதிரி மக்கள்கிட்ட நேரடி தொடர்பு இல்லாத்தால மக்களுக்கு அவ்வளவா இந்த ஆபிஸ் பத்தி தெரியலைனும் சிலர் சொல்றாங்க. தேர்தல் கமிஷன் போல கணக்குத் தணிக்கைத் துறைங்கிறது தன்னிச்சையான ஒரு அமைப்பு என்பதும் அரசியலமைப்புச் சட்டமே இதுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியிருக்கு எனவும் பலருக்கும் தெரியறதில்லை’ எனப் பேசினார் தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் கே.பி. ஆனந்த்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மாநிலக் கணக்காயர் அலுவலகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் கரகம், ஒயிலாட்டம், என கலை நிகழ்ச்சிகள் பல நடந்தேற உற்சாகமாகத் திரண்டிருந்த அதன் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.
‘’பிரிட்டிஷ் இந்திய அரசில் அதாவது 1860-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இங்க முதல் தணிக்கை அதிகாரி பதவி ஏற்றிருக்கிறார். அதனை நினைவுகூறும் விதமாகத்தான் இந்த ‘ஆடிட் வீக்’. முன்னாடில்லாம் எங்க அலுவலக வளாகத்துக்குள் சிம்பிளா செலிபிரேட் செய்துட்டு விட்டுடுவோம். ஆனா சமீபமா எங்கப் பணிகள் பத்திப் பொதுமக்களும் அவசியம் தெரிஞ்சுக்க வேணும்னு நினைக்கிறோம். அதனாலதான் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் எல்லாம்.
மக்கள் இந்த ஆபீஸ் பத்தி ஏன் தெரிஞ்சுக்கணும்னா, ஜனநாயகத்துல முக்கியமான ஒரு அங்கம் இந்த ஆபீஸ். மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி தங்களுடைய வருமானத்தை மக்களின் திட்டங்களுக்காகச் சரியான முறையில் செலவு செய்கிறதாங்கிறதைக் கண்காணிக்கிறதே நாங்கதான்.
அரசுத் துறை தவிர அரசின் பொத்துறை நிறுவன வரவு செலவுகளுமே எங்க கட்டுப்பாட்டின் கீழ்தான் வரும். ஒவ்வொரு வருஷமும் வரவு செலவுகளை ஆராய்ஞ்சு முதல்ல சி.ஏ.ஜி.ங்கிற எங்க தலைமை அதிகாரிக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கிட்டு அதன்பிறகு மாநில அளவுல கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி அதன்பிறகே சட்டசபையில அந்த அறிக்கை வைக்கப்பட்டு பொதுவெளிக்கு வருது’’ என்கின்றனர் இவர்கள்.
சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இதுவரையில் நாட்டில் நடந்த பல ஊழல்கள், நிதிமுறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறதாம் இந்தியத் தணிக்கைத் துறை.
’சி.ஏ.ஜி. ரிப்போர்ட்டானது சில நேரங்களில் மத்தியிலும் மாநிலங்களிலும் பல ஆட்சி மாற்றங்களுக்குக் காரணமாகியிருக்கிறது’ என்கிறார்கள்.
What's Your Reaction?