ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? - தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். பிரிட்டிஷ் அரசிடமிருந்து ராகுல் காந்திக்கு ரகசிய மின்னஞ்சல்களும் வந்துள்ளது. இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் இருமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என தெரிவித்திருந்தார்.பாஜக, காங்கிரஸ்Israel: `போர் முடிகிறது' - அறிவித்த ஜோ பைடன்... `ஆனாலும், தொடங்கும்' - செக் வைத்த நெதன்யாகு!இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே "இந்த விவகாரம் தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்" என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி அட்டாவ் ரஹ்மான் மசூதி, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, "அடுத்த விசாரணைக்குள் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரியப் பதிலைப் பெற்றுத் தரவேண்டும். இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றனர்.இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு எஸ்.விக்னேஷ் ஷிஷிர் அளித்தப் பேட்டியில், "இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 19-ம் தேதிக்குள் தெளிவான மற்றும் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகமும் தனது விசாரணை முடிவுகளை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை அரசு உடனடியாக ரத்து செய்யும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து குடியுரிமைப் பதிவேடுகளில் ராகுல் காந்தியின் பெயர் இருப்பதாக இங்கிலாந்து அரசிடமிருந்து எங்களுக்கு நேரடித் தகவல் கிடைத்துள்ளது" என்றார். ஜி.கே.முரளிதரன்இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், "எதையாவது செய்து ராகுல்காந்தியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என பாஜக போடும் திட்டம்தான் இது. ஏற்கெனவே தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜுடோ யாத்திரை மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பாஜகவினருக்கு கிலியை கொடுத்தது. எனவேதான் அவர் தவறாக பேசியதாக வழக்கு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பிடுங்கினார்கள். வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.ஆனால் பா.ஜ.க-வினரின் சூழ்ச்சி எடுபடவில்லை. நீதி தேவதையும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை தனது கரங்களில் தங்கி கொண்டார்கள். மகாத்மா காந்திக்கு அடுத்தது ராகுல் காந்திதான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட தலைவராக இருக்கிறார். எனவேதான் பா.ஜ.க-வினர் இதுபோன்ற தரக்குறைவான செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதுமட்டும்தான் தெரியும். துஷ்டர்கள் கையில் நாடு சென்றுவிட்டது. எனவே நாடு துண்டாடப்படுவதை யாராலும் தடுக்க முடியாது" என கொதித்தார்.நாரயணன்இறுதியாக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்தியிடம் விளக்கம் கேட்டோம், "இந்திய சட்டங்களை, நீதிமன்றங்களை மதித்து வழக்குகளை சந்திக்க வேண்டியது அவர்களின் கடமை. தனக்கு எதிரான குற்றச்சாட்டாக இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே?. மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜெயிலில் இருக்க வேண்டிய ராகுல் காந்தி பெயிலில்தான் இருக்கிறார். நாங்கள் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.`ராமதாஸ் விவகாரத்தில் கொதிக்கும் பாஜக' - பாமக மீது பாசமா? அரசியல் கணக்கா?!நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanavuAudioBook

Nov 27, 2024 - 16:24
 0  8
ராகுல் காந்தி பிரிட்டன் சிட்டிசனா? - தீவிரமாக ஆராயும் மத்திய உள்துறை!

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி எஸ்.விக்னேஷ் ஷிஷிர் என்பவர் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். பிரிட்டிஷ் அரசிடமிருந்து ராகுல் காந்திக்கு ரகசிய மின்னஞ்சல்களும் வந்துள்ளது. இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் இருமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என தெரிவித்திருந்தார்.

பாஜக, காங்கிரஸ்

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.பி.பாண்டே "இந்த விவகாரம் தொடர்பாகப் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி அட்டாவ் ரஹ்மான் மசூதி, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, "அடுத்த விசாரணைக்குள் உள்துறை அமைச்சகத்திடமிருந்து உரியப் பதிலைப் பெற்றுத் தரவேண்டும். இந்த வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்றனர்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு எஸ்.விக்னேஷ் ஷிஷிர் அளித்தப் பேட்டியில், "இந்த விவகாரத்தில் அடுத்த விசாரணை நாளான டிசம்பர் 19-ம் தேதிக்குள் தெளிவான மற்றும் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சகமும் தனது விசாரணை முடிவுகளை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை அரசு உடனடியாக ரத்து செய்யும் என்று நான் நம்புகிறேன். இங்கிலாந்து குடியுரிமைப் பதிவேடுகளில் ராகுல் காந்தியின் பெயர் இருப்பதாக இங்கிலாந்து அரசிடமிருந்து எங்களுக்கு நேரடித் தகவல் கிடைத்துள்ளது" என்றார்.

ஜி.கே.முரளிதரன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், "எதையாவது செய்து ராகுல்காந்தியின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என பாஜக போடும் திட்டம்தான் இது. ஏற்கெனவே தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜுடோ யாத்திரை மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. மேலும் நாடாளுமன்றத்தில் அவரது பேச்சுக்கு பாஜகவினருக்கு கிலியை கொடுத்தது. எனவேதான் அவர் தவறாக பேசியதாக வழக்கு போட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பிடுங்கினார்கள். வீட்டில் இருந்து வெளியேற்றினார்கள்.

ஆனால் பா.ஜ.க-வினரின் சூழ்ச்சி எடுபடவில்லை. நீதி தேவதையும், இந்திய மக்களும் ராகுல் காந்தியை தனது கரங்களில் தங்கி கொண்டார்கள். மகாத்மா காந்திக்கு அடுத்தது ராகுல் காந்திதான் இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்ட தலைவராக இருக்கிறார். எனவேதான் பா.ஜ.க-வினர் இதுபோன்ற தரக்குறைவான செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அதுமட்டும்தான் தெரியும். துஷ்டர்கள் கையில் நாடு சென்றுவிட்டது. எனவே நாடு துண்டாடப்படுவதை யாராலும் தடுக்க முடியாது" என கொதித்தார்.

நாரயணன்

இறுதியாக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்தியிடம் விளக்கம் கேட்டோம், "இந்திய சட்டங்களை, நீதிமன்றங்களை மதித்து வழக்குகளை சந்திக்க வேண்டியது அவர்களின் கடமை. தனக்கு எதிரான குற்றச்சாட்டாக இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே?. மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜெயிலில் இருக்க வேண்டிய ராகுல் காந்தி பெயிலில்தான் இருக்கிறார். நாங்கள் சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist