“இந்தியா நடுநிலை வகிக்கவில்லை... அமைதியின் பக்கம் நிற்கிறது!” - உக்ரைனில் பிரதமர் மோடி விளக்கம்
ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கீவ்: ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அது அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விலாதிமிர் ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் தூதுக் குழுக்களுடனும் உரையாடினர். அப்போது பேசிய நரேந்திர மோடி, "பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
What's Your Reaction?