சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் முதல்வர், டிஜிபி அடங்கிய குழுவும், மாவட்ட ங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளன

Jun 11, 2025 - 15:57
 0  47
சாதி சங்கங்களுக்கு தடை கோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அளவில் முதல்வர், டிஜிபி அடங்கிய குழுவும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளன. மாவட்டக் குழு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரித்து, மாநில குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறுவதாக தெரியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist