அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: நில மோசடி புகாரில் சிபிசிஐடி நடவடிக்கை
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூரில் 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து பத்திரப் பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட 7 பேர் மீது, கரூர் நகர காவல் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர்(பொ) முகமது அப்துல் காதர் கடந்த மாதம் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வழக்குசிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
What's Your Reaction?