Tamil News Live Today: ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!ராணுவ தளபதி மனோஜ் பாண்டேராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதிய அரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி அவர் ஓய்வு பெறுவார் என்ற உத்தரவை மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ளது.டெல்லி: வெடிகுண்டு மிரட்டல்... எமர்ஜென்சி எக்ஸிட் வழியே வெளியேற்றப்பட்ட பயணிகள்!இன்று அதிகாலை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் கழிவறையில் டிஷ்யூ பேப்பரில் "வெடிகுண்டு" என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பை இண்டிகோ விமான குழுவினர் விமானம் புறப்படுவதற்கு சற்று முன் கண்டுபிடித்ததாக, அந்த இடத்தில் இருந்த விமானப் பாதுகாப்பு அதிகாரி கூறுகிறார்.#WATCH | Passengers of the IndiGo flight 6E2211 operating from Delhi to Varanasi were evacuated through the emergency door after a bomb threat was reported on the flight. All passengers are safe, flight is being inspected. (Viral video confirmed by Aviation authorities) https://t.co/el2q5jCatx pic.twitter.com/ahVc0MSiXz— ANI (@ANI) May 28, 2024 இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு டெல்லி விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானம் 6E2211 இன் கழிவறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனினும் இது புரளி" எனக் குறிப்பிட்டார். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அவசர அவசரமாக, எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E2211 டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு ஏஜென்சிகளின் வழிகாட்டுதலின்படி விமானம் தனிமைபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் முனையப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

May 28, 2024 - 12:43
 0  2
Tamil News Live Today: ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிப்பு..!

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

ராணுவத்தின் தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதிய அரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி அவர் ஓய்வு பெறுவார் என்ற உத்தரவை மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ளது.

டெல்லி: வெடிகுண்டு மிரட்டல்... எமர்ஜென்சி எக்ஸிட் வழியே வெளியேற்றப்பட்ட பயணிகள்!

இன்று அதிகாலை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் கழிவறையில் டிஷ்யூ பேப்பரில் "வெடிகுண்டு" என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பை இண்டிகோ விமான குழுவினர் விமானம் புறப்படுவதற்கு சற்று முன் கண்டுபிடித்ததாக, அந்த இடத்தில் இருந்த விமானப் பாதுகாப்பு அதிகாரி கூறுகிறார்.

இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு டெல்லி விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானம் 6E2211 இன் கழிவறையில் வெடிகுண்டு என்று எழுதப்பட்ட டிஷ்யூ பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். எனினும் இது புரளி" எனக் குறிப்பிட்டார். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் அவசர அவசரமாக, எமர்ஜென்ஸி எக்ஸிட் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம், ``டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E2211 டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு ஏஜென்சிகளின் வழிகாட்டுதலின்படி விமானம் தனிமைபடுத்தப்பட்டது. பின்னர் அனைத்து பயணிகளும் அவசர கால வழிகள் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடிந்த பிறகு, விமானம் மீண்டும் முனையப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist