Tamil News Live Today: குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்
குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்!குவைத்தில் நடந்த தீ விபத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த கருப்பணன் ராமு தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குவைத் தீ விபத்துஇதனிடையே, குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞரான ரிச்சர்ட்டின் நிலை குறித்து தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து நிற்கின்றனர்.ஜி 7 மாநாடு... இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி! மோடிபிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அண்மையில் பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குவைத் தீ விபத்து: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்ததாக தகவல்!
குவைத்தில் நடந்த தீ விபத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த கருப்பணன் ராமு தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடலை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணி பகுதியை சேர்ந்த இளைஞரான ரிச்சர்ட்டின் நிலை குறித்து தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து நிற்கின்றனர்.
ஜி 7 மாநாடு... இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி, ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று இத்தாலி செல்கிறார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அண்மையில் பிரதமராகப் பதவி ஏற்றபின் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இத்தாலியில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரையில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஜி7 அமைப்பின் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?