Kuwait தீவிபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா? - விசாரிக்க ஸ்டாலின் உத்தரவு
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் (Kuwait) மங்காஃப் பகுதியிலுள்ள அமைந்துள்ள 6 மாடி கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் புகை சுவாசித்ததால் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களில் நிறைய பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Kuwait Fire Accident - மோடிஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குவைத்திலுள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது. தீ விபத்து நடந்த கட்டடத்தை, பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான NBTC குழுமம், 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்திருந்தது. அங்கு தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இதையறிந்து இரங்கல் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குவைத்திலுள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு உதவி செய்யும் என்று உறுதியளித்தார். பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் எனது எண்ணங்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவரிடமும் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். குவைத்திலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார், மோடி - ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலின், ``குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்,மேலும், ``இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:இந்தியாவிற்குள்: +91 1800 309 3793வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் (Kuwait) மங்காஃப் பகுதியிலுள்ள அமைந்துள்ள 6 மாடி கட்டடத்தில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், பெரும்பாலானோர் தூங்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் புகை சுவாசித்ததால் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களில் நிறைய பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குவைத்திலுள்ள இந்திய தூதரகம், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த இந்தியர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தது. தீ விபத்து நடந்த கட்டடத்தை, பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான NBTC குழுமம், 195-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்திருந்தது. அங்கு தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள். இதையறிந்து இரங்கல் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குவைத்திலுள்ள இந்திய தூதரகம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழு உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் எனது எண்ணங்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவரிடமும் இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். குவைத்திலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்,
தமிழக முதல்வர் ஸ்டாலின், ``குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்,
மேலும், ``இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901 ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?