Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்'' - ஸ்டாலின்

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.அந்தக் கடிதத்தில், " ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிட மிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்க வைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல்தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!ஸ்டாலின்`எனக்கு சரியாக இந்தி தெரியாது; தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்னை’ - நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளத்தைக் கொண்ட இயக்கத்தின் வழிவந்தவர்கள் நாம். தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­யைப் பெற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­கா­மல், மத்திய பாஜக அரசு வஞ்­சித்து வரும் போக்கை தமிழ்­நாட்­டின் பள்ளி மாண­வர்­க­ளும்­கூட தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள். 10 ஆயி­ரம் கோடி தந்­தா­லும் இந்­தி­யைத் திணிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம். நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பதாகும். ஸ்டாலின் இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!’ என்று யாரையும் தடுக்கவில்லை. ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற் கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்." என்று தெரிவித்துள்ளார்.``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel

Feb 25, 2025 - 15:19
 0  16
Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்'' - ஸ்டாலின்
தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், " ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போராட்டம் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் அறவழிப் போராட்டம். அன்னைத் தமிழை ஆதிக்க மொழியிட மிருந்து பாதுகாக்கின்ற போராட்டம். இனத்தின் அடையாளத்தைத் தக்க வைத்து, தாய்மொழியைக் காலத்திற்கேற்ற அறிவியல்தொழில்நுட்பத் தன்மையுடன் வளர்த்தெடுக்கும் போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று நான் உறுதி அளிக்கிறேன். உயிரைக் கொடுத்து தமிழைக் காத்த கொள்கைப் பட்டாளத்தைக் கொண்ட இயக்கத்தின் வழிவந்தவர்கள் நாம். தாய்மொழியை அடிப்படையாகவும், ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும் கொண்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணா வகுத்தளித்த இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு கடைப்பிடித்து வருவதால்தான் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­யைப் பெற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­கா­மல், மத்திய பாஜக அரசு வஞ்­சித்து வரும் போக்கை தமிழ்­நாட்­டின் பள்ளி மாண­வர்­க­ளும்­கூட தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள். 10 ஆயி­ரம் கோடி தந்­தா­லும் இந்­தி­யைத் திணிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம். நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு வழங்கியுள்ள ஐம்பெரும் முழக்கங்களில் மூன்றாவது முழக்கம், ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!’ என்பதாகும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இன்றும் அதனை எதிர்க்கிறோம். ‘இந்தி படிக்காதே!’ என்று யாரையும் தடுக்கவில்லை. ‘இந்தியை எங்கள் மீது திணிக்காதே!’ என்று ஆதிக்க சக்திகளுடன் அறப்போரைத் தொடர்ந்து நடத்துகிறோம். இந்தப் போரில் ஒருபோதும் சமரசமில்லை. இத்தனை உறுதியாக ஏன் எதிர்க்கிறோம் இந்தித் திணிப்பை என்பதை எதிரிகளுக்காக மட்டுமல்ல, இளந்தலைமுறையினரும் புரிந்துகொள்வதற் கான முதல் மடல் இது. தொடர்ச்சியாக மடல் எழுதுவேன்." என்று தெரிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist