Odisha: `வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல..!' - நவீன் பட்நாயக் ஓப்பன் டாக்
இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இங்கு 2000-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக்கை வீழ்த்த பா.ஜ.க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், முக்கியமாக நவீன் பட்நாயக் அரசை பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் நடத்துவதாகவும், மீண்டும் பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்றால் வி.கே.பாண்டியன் முதல்வராக்கப்படுவார் என்றும், தமிழர் ஒடிசா முதல்வராக அனுமதிக்கக் கூடாது என்றும் பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது.மோடி - வி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்மேலும் பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், அரசை பின்னாலிருந்து இயக்கும் லாபிதான் இதற்குக் காரணமா என்றும் நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு, `மோடிக்கு என்மீது உண்மையில் அக்கறையிருந்தால் எனக்கு போன் செய்யட்டும். கடந்த 10 ஆண்டுகளாகவே இது போன்ற வதந்திகள் பா.ஜ.க-விலிருந்து பரப்பப்படுகிறது' என நவீன் பட்நாயக் நேற்றே பதிலளித்திருந்தார். இந்த நிலையில், வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு கிடையாது என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், ``இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.நவீன் பட்நாயக்அதோடு, எனக்குப் பிறகு யார் என்ற எந்த அரசியல் வாரிசு திட்டமும் இல்லை. ஒடிசா மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள். நாங்கள் வெற்றிபெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நிச்சயம் நானே முதலமைச்சராக இருப்பேன் என்று நம்புகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வழிநடத்தி வருகிறேன். நன்றாக நடத்திவருகிறேன் என்றே நினைக்கிறேன், அவ்வாறே தொடர்வேன்" என்றார்.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbநவீன் பட்நாயக் உடல்நிலையை வைத்து மோடி அரசியல் செய்வது சரியா?!
இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது. இங்கு 2000-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக்கை வீழ்த்த பா.ஜ.க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், முக்கியமாக நவீன் பட்நாயக் அரசை பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் நடத்துவதாகவும், மீண்டும் பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்றால் வி.கே.பாண்டியன் முதல்வராக்கப்படுவார் என்றும், தமிழர் ஒடிசா முதல்வராக அனுமதிக்கக் கூடாது என்றும் பா.ஜ.க பிரசாரம் செய்துவருகிறது.
மேலும் பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், அரசை பின்னாலிருந்து இயக்கும் லாபிதான் இதற்குக் காரணமா என்றும் நேற்று கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு, `மோடிக்கு என்மீது உண்மையில் அக்கறையிருந்தால் எனக்கு போன் செய்யட்டும். கடந்த 10 ஆண்டுகளாகவே இது போன்ற வதந்திகள் பா.ஜ.க-விலிருந்து பரப்பப்படுகிறது' என நவீன் பட்நாயக் நேற்றே பதிலளித்திருந்தார். இந்த நிலையில், வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு கிடையாது என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்துடனான பேட்டியில் வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தங்களுக்குப் பிறகு அவர்தான் என்றும் வரும் பேச்சுகள் அடிபடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நவீன் பட்நாயக், ``இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜ.க-வின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன.
அதோடு, எனக்குப் பிறகு யார் என்ற எந்த அரசியல் வாரிசு திட்டமும் இல்லை. ஒடிசா மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள். நாங்கள் வெற்றிபெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நிச்சயம் நானே முதலமைச்சராக இருப்பேன் என்று நம்புகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வழிநடத்தி வருகிறேன். நன்றாக நடத்திவருகிறேன் என்றே நினைக்கிறேன், அவ்வாறே தொடர்வேன்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?