D-Day கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 2-ம் உலகப் போரின் 102 வயது வீரர் மரணம்
இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார்.
பெர்லின்: இரண்டாம் உலகப் போரின் D-Day 80-வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற 102 வயதான கடற்படை வீரரான ராபர்ட், நியூயார்கில் இருந்து பிரான்ஸ் நாட்டின் நார்மாண்டிக்கு பயணம் மேற்கொண்ட போது உயிரிழந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி படைகளின் வசம் இருந்த பிரான்ஸ் நாட்டின் பகுதியை மீட்கும் வகையில் நேச நாட்டு படைகள் நார்மாண்டியில் 1944, ஜூன் 6-ம் தேதி அன்று படைகளை இறக்கி இருந்தன. இது போரில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. போர் முடிந்த பிறகு ஆண்டுதோறும் D-Day கொண்டாட்டம் என இது கொண்டாடப்படுகிறது. இதன் 80-வது நிறைவு விழாவில் பங்கேற்க ராபர்ட் தன்னுடன் போரிட்ட சகாக்களுடன் கப்பலில் பயணம் சென்றிருந்தார்.
What's Your Reaction?