2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம்

மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார்.

Sep 26, 2024 - 09:48
 0  10
2004 அதிசயம்: லாரா தலைமையில் மே.இ.தீவுகள் ‘த்ரில்’ ஆக வென்ற அரிதான ஐசிசி கோப்பை | மறக்குமா நெஞ்சம்

புது டெல்லி: மே.இ.தீவுகள் அணியின் பிரபல்யம் வீழ்ந்து விட்டக் காலக்கட்டம். பிரையன் லாரா தன் இறுதிக் கட்டத்தில் இருந்தாலும் கேப்டனாகப் பொறுப்பில் இருந்தார். கிறிஸ் கெயில், ராம்நரேஷ் சர்வான், சந்தர்பால், டிவைன் பிராவோ, இவர்களோடு ரிக்கார்டோ போவல் என்னும் காட்டடி மன்னனும் அணியில் இருந்தார். பந்து வீச்சில் மெர்வின் டிலானைத் தாண்டி அதிகம் அறியப்படாத பவுலர்களாகவே இருந்த சமயம். அப்போதுதான் இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின.

அதில் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 259/9 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய மைக்கேல் வான் தலைமையிலான இங்கிலாந்து அணி 46.3 ஓவர்களில் 262/4 என்று அபார வெற்றி பெற்றது. ட்ரஸ்கோதிக் 88 பந்துகளில் 81 ரன்களையும், மைக்கேல் வான் 81 ரன்களையும், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 52 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, பிரெட் லீ, மைக்கேல் காஸ்பரோவிச் போன்ற சிறந்த பவுலிங் இருந்தும் இங்கிலாந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. மற்றொரு அரையிறுதி சவுத்தாம்ப்டனில் பாகிஸ்தான், மே.இ.தீவுகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இன்சமாம் உல் ஹக் கேப்டன்சியில் பாகிஸ்தான் அணி 131 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 29-வது ஓவரில் 132/3 என்று அபார வெற்றி பெற்று இங்கிலாந்தை இறுதியில் எதிர்கொள்ளத் தயாரானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist