ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி நேரடி வார்த்தை மோதல்! - நடப்பது என்ன?

விமர்சனம் செய்த எடப்பாடி!எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்குச் சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்புக் காட்டப்படுகிறது.எடப்பாடி பழனிசாமிசென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாகத் தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காகப் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்புக் காட்டுவதற்கான காரணம் என்ன? முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை பெயரை அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யத் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் விருதுநகரில் பேசிய முதல்வர் ஸ்டலைன், "பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு புழுகு மூட்டையை அவர் அவிழ்த்து விடுகிறார். எதை மக்களுக்குப் பயன்படாத திட்டங்கள் எனச் சொல்கிறார்? தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குக் கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கு, தென் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களுக்கும் அறிவுச்சுரங்கமான மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கும் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை… இவற்றைப் பயனில்லாத திட்டம் எனச் சொல்கிறாரா? தமிழ்நாட்டில் இருக்கும் 1.20 கோடி தாய்மார்கள் பயன்பெறும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் கலைஞர் உரிமைத்திட்டம். அதைப் பயனில்லாதது எனச் சொல்கிறாரா?முதல்வர் ஸ்டாலின்எதைச் சொல்கிறீர்கள் பழனிசாமி? வாய்த்துடுக்காகப் பேசி, பேசித்தான் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறீர்கள். உங்களுடைய ஆணவத்திற்காகத் தமிழ் நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடித்துக்கொண்டே தான் இருப்பார்கள். தமிழ்நாட்டைக் காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்? பதவி சுகத்திற்காகக் கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்? கலைஞர் தான் தமிழ்நாட்டை எந்நாளும் காக்கக் கூடிய காவல் அரண். அவரின் கொள்கைகள், சிந்தனைகளைச் செயல்படுத்தி வருகிறேன். கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, தொண்டனாகப் பெருமையாகச் செல்வேன். கலைஞர் புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வெளிச்சம் பழனிசாமி கண்களைக் கூச வைக்கிறது" என்று பேசியிருந்தார். சவால் விட்ட எடப்பாடி!தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை நான் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அம்மாவின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியை வாங்கியிருக்கிறேன். திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னை விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகச் சேலம் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.எடப்பாடி பழனிசாமிஅதிமுக ஆட்சிக் காலத்தில் பல துறைகளில் இந்திய அளவில் விருதுகளைப் பெற்றது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழக முதன்மையாக விளங்கியது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தாராளமாக உள்ளது. கலைஞரின் அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாவது காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கியிருக்கிறது. பயனற்ற திட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிடுவதைத் தடுக்க வேண்டும். கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?" என்று சவால் விட்டிருந்தார்.சவாலை ஏற்ற உதயநிதி!இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "சென்னைக்கு அருகில் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைப்பது தொடர்பாக நிலப் பிரச்னை இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் தாமதமானது. அரசுத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். என்னை அழைத்தால் நான் செல்வேன்.உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமிதொடர்ந்து கலைஞர் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவது

Nov 12, 2024 - 12:38
 0  10
ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி  நேரடி வார்த்தை மோதல்! - நடப்பது என்ன?

விமர்சனம் செய்த எடப்பாடி!

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில், பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அவை முழுமையாக முடிக்கப்படாமலும், கிடப்பிலும் போடப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்ளாமல், அத்தியாவசியமற்ற செலவுகளை ஸ்டாலினின் தலைமையிலான திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்குச் சிறிதும் பயனளிக்காத கார் ரேஸ் நடத்தப்படுகிறது. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. சென்னை கடலின் நடுவே கலைஞர் பேனா சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்க முனைப்புக் காட்டப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

சென்னை முட்டுக்காட்டில் ஐந்து லட்சம் சதுர அடியில், 487 கோடி ரூபாய் செலவில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைப்பதற்கு இந்த திராவிட மாடல் அரசு டெண்டர் கோரியுள்ளது. பல ஆண்டுகளாகத் தமிழக விவசாயிகள் நதிநீர் இணைப்புக்காகப் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், திராவிட மாடல் அரசு அதில் கவனம் செலுத்தாமல் பன்னாட்டு அரங்கம் கட்டுவதற்கு முனைப்புக் காட்டுவதற்கான காரணம் என்ன? முதல்வர் ஸ்டாலின், அவரின் தந்தை பெயரை அரசு கட்டடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை சார்பில் அப்பணிகளை மேற்கொள்ளலாம். போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக தேவையான நிதியினை அத்திட்டங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யத் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் விருதுநகரில் பேசிய முதல்வர் ஸ்டலைன், "பொய் சொல்லலாம் ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பொய்க்கூடாது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு புழுகு மூட்டையை அவர் அவிழ்த்து விடுகிறார். எதை மக்களுக்குப் பயன்படாத திட்டங்கள் எனச் சொல்கிறார்? தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்குக் கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கு, தென் தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களுக்கும் அறிவுச்சுரங்கமான மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்கும் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை… இவற்றைப் பயனில்லாத திட்டம் எனச் சொல்கிறாரா? தமிழ்நாட்டில் இருக்கும் 1.20 கோடி தாய்மார்கள் பயன்பெறும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் கலைஞர் உரிமைத்திட்டம். அதைப் பயனில்லாதது எனச் சொல்கிறாரா?

முதல்வர் ஸ்டாலின்

எதைச் சொல்கிறீர்கள் பழனிசாமி? வாய்த்துடுக்காகப் பேசி, பேசித்தான் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறீர்கள். உங்களுடைய ஆணவத்திற்காகத் தமிழ் நாட்டு மக்கள் உங்களைத் தோற்கடித்துக்கொண்டே தான் இருப்பார்கள். தமிழ்நாட்டைக் காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைக்க வேண்டும்? பதவி சுகத்திற்காகக் கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்? கலைஞர் தான் தமிழ்நாட்டை எந்நாளும் காக்கக் கூடிய காவல் அரண். அவரின் கொள்கைகள், சிந்தனைகளைச் செயல்படுத்தி வருகிறேன். கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, தொண்டனாகப் பெருமையாகச் செல்வேன். கலைஞர் புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வெளிச்சம் பழனிசாமி கண்களைக் கூச வைக்கிறது" என்று பேசியிருந்தார்.

சவால் விட்ட எடப்பாடி!

தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை நான் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அம்மாவின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு நான்கரை ஆண்டுக்காலம் சிறப்பான ஆட்சியை வாங்கியிருக்கிறேன். திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னை விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக இருக்கிறது. புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகச் சேலம் கால்நடை பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிக் காலத்தில் பல துறைகளில் இந்திய அளவில் விருதுகளைப் பெற்றது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழக முதன்மையாக விளங்கியது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தாராளமாக உள்ளது. கலைஞரின் அடையாளத்தில் தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும். திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாவது காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கியிருக்கிறது. பயனற்ற திட்டங்களைக் கொண்டுவந்து மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிடுவதைத் தடுக்க வேண்டும். கலைஞர் மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?" என்று சவால் விட்டிருந்தார்.

சவாலை ஏற்ற உதயநிதி!

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "சென்னைக்கு அருகில் விளையாட்டு அரங்கம் விரைவில் அமைப்பது தொடர்பாக நிலப் பிரச்னை இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் தாமதமானது. அரசுத் திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அழைத்திருக்கிறார். என்னை அழைத்தால் நான் செல்வேன்.

உதயநிதி ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து கலைஞர் பெயர் திட்டங்களுக்கு வைக்கப்படுவது விமர்சிக்கப்படுகிறது... பொதுவாக விமர்சனம் என்றால் வரத்தான் செய்யும். வேறு யார் பெயரை வைப்பது... யாருடைய பெயர் வைக்க வேண்டுமோ அவரின் பெயரைத்தான் வைக்கிறோம். மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது. அரசு தன் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறது" என்று எடப்பாடியின் சவாலுக்குப் பதில் சொல்லியிருந்தார்.

இப்படி திட்டங்களுக்கான பெயர் விவகாரத்தில் மாறி மாறி புகார் கூறி வருகிறார்கள். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுகள் கடந்த சில நாள்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள சவால் விடும் அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளனர் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist