`வைத்திலிங்கம் அதிமுக-வுக்கு தேவையில்லை..!' - எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்ட தஞ்சை நிர்வாகிகள்?

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜ், ரெத்தினசாமி, மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிர்வாகிகள் சிலர், ``வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர இருப்பதாக பேசப்படுகிறது. அவரை கட்சியில் சேர்க்க கூடாது. அவர் கட்சிக்கு தேவையில்லை" என்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை நிர்வாகிகள்இது குறித்து உள்விவரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ``ஓ.பி.எஸ் அணியில் வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இருவருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அது இப்போது வரை தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர இருப்பதாக டெல்டா அரசியலில் தகவல்கள் சிறகடிக்கிறது. அதற்கேற்றார் போல், `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, விரைவில் சுபம் உண்டாகும்’ என வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர்வது போன்ற தொனியில் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூர் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கவனிக்கப்பட்டது. வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் சிலர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒற்றைத்தலைமை பிரச்னைக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினர். அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமியின் கைக்கு சென்றதும் வைத்திலிங்கம் ஆதரவாளர்களாக அறியபட்ட நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முகாமிற்கு சென்றனர். வைத்திலிங்கத்தை சோழமண்ட தளபதி என அழைத்தவர்கள், அதன் பின்னர் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரான ஆர்.காமராஜை சோழமண்டல தளபதி என அழைக்கத்தொடங்கினர். தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்இந்நிலையில் அ.தி.மு.க-வில் மீண்டும் வைத்திலிங்கம் என்ற பேச்சுகள் பேசு பொருளாகியிருக்கின்றன. வைத்திலிங்கத்தை எதிர்த்து கொண்டு சென்றவர்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்க கூடாது என்றதாக சொல்லபடுகிறது. குறிப்பாக மாநகரச் செயலாளர் சரவணன், வைத்திலிங்கம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த கருத்துகள் அனலை கூட்டியுள்ளன.`வைத்திலிங்கம் கட்சியில் சேரப்போவதாக பேசப்படுகிறது. கடந்த காலங்களில் கட்சியில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு வைத்திலிங்கம்தான் காரணம். 2021 தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். ஆனால் தான் போட்டியிட்ட ஒரத்தநாட்டை தவிர வேறு எந்த தொகுதியின் வெற்றிக்கும் அவர் மெனக்கெடாததால் கட்சி தோல்வியடைந்தது. இரட்டைத்தலைமை இருந்த போது காழ்ப்புணர்ச்சியில் பலரை கட்சியிலிருந்து நீக்கினார். இது குறித்து அப்போது தலைமையிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ் மூலமாக நீக்கியுள்ளதாக தெரிவித்தார்கள், அப்பவே நான், கட்சிக்கு ஒற்றைத்தலைமை தான் நல்லது என்றேன். எதிரிகள் ஒருபக்கம், துரோகிகள் ஒரு பக்கம் இருந்தும் 75 சீட் வெற்றி பெற்றதற்கு பொதுச்செயலாளர் பிரசாரமும், வியூகமும் தான் காரணம்.வைத்திலிங்கம்2026 தேர்தலிலும் இது போல் செயல்பட வேண்டும். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரில் அவரால் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தன்னை ஆளுமையாக காட்டிக்கொள்கிற அவருக்கு செல்வாக்கு இல்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என நம்பக் கூடாது. வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது தேவையில்லாதது, அவர் கட்சிக்கு தேவையில்லை' என சிலர் தங்களின் கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, வைத்திலிங்கம் கட்சியில் சேருவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, `வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. கட்சி அலுவலகத்தை சேதப்படுத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அவரை கட்சியில் சேர்ப்பதற்கான எண்ணம் இல்லை. தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படும் நான், அவர்கள் கருத்தை கேட்டு தான் எதுவாக இருந்தாலும் செய்வேன்' என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கம்வைத்திலிங்கம் தரப்பினரிடம் இது குறித்து பேசியபோது, ``மா.சேகர், ராஜமாணிக்கம் சரவணன் போன்றவர்கள் வைத்திலிங்கம் கட்சிக்கு தேவையில்லை என பேசியுள்ளனர். வைத்திலிங்கம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் அவர், அவர்களை ஓரம்கட்டுவார் என்ற எண்ணத்தில் கட்சி வலுவடையும் என்பதை பார்க்காமல் தனிப்பட்ட சுயநலத்திற்காக தங்களுடைய பதவிக்காக இது போல் பேசுகின்றனர்." என்றனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Jul 17, 2024 - 11:01
 0  5
`வைத்திலிங்கம் அதிமுக-வுக்கு தேவையில்லை..!' - எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்ட தஞ்சை நிர்வாகிகள்?

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சி.வி.சேகர், கோவிந்தராஜ், ரெத்தினசாமி, மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிர்வாகிகள் சிலர், ``வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர இருப்பதாக பேசப்படுகிறது. அவரை கட்சியில் சேர்க்க கூடாது. அவர் கட்சிக்கு தேவையில்லை" என்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை நிர்வாகிகள்

இது குறித்து உள்விவரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், ``ஓ.பி.எஸ் அணியில் வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இருவருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அது இப்போது வரை தொடர்வதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் மீண்டும் அ.தி.மு.க-வில் சேர இருப்பதாக டெல்டா அரசியலில் தகவல்கள் சிறகடிக்கிறது. அதற்கேற்றார் போல், `ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, விரைவில் சுபம் உண்டாகும்’ என வைத்திலிங்கம் மீண்டும் கட்சியில் சேர்வது போன்ற தொனியில் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கவனிக்கப்பட்டது. வைத்திலிங்கத்துடன் நெருக்கமாக இருந்த நிர்வாகிகள் சிலர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒற்றைத்தலைமை பிரச்னைக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினர். அ.தி.மு.க, எடப்பாடி பழனிசாமியின் கைக்கு சென்றதும் வைத்திலிங்கம் ஆதரவாளர்களாக அறியபட்ட நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முகாமிற்கு சென்றனர். வைத்திலிங்கத்தை சோழமண்ட தளபதி என அழைத்தவர்கள், அதன் பின்னர் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரான ஆர்.காமராஜை சோழமண்டல தளபதி என அழைக்கத்தொடங்கினர்.

தஞ்சாவூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்

இந்நிலையில் அ.தி.மு.க-வில் மீண்டும் வைத்திலிங்கம் என்ற பேச்சுகள் பேசு பொருளாகியிருக்கின்றன. வைத்திலிங்கத்தை எதிர்த்து கொண்டு சென்றவர்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கடந்த 12ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்க கூடாது என்றதாக சொல்லபடுகிறது. குறிப்பாக மாநகரச் செயலாளர் சரவணன், வைத்திலிங்கம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த கருத்துகள் அனலை கூட்டியுள்ளன.

`வைத்திலிங்கம் கட்சியில் சேரப்போவதாக பேசப்படுகிறது. கடந்த காலங்களில் கட்சியில் நடந்த பல்வேறு தவறுகளுக்கு வைத்திலிங்கம்தான் காரணம். 2021 தேர்தலில் 14 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். ஆனால் தான் போட்டியிட்ட ஒரத்தநாட்டை தவிர வேறு எந்த தொகுதியின் வெற்றிக்கும் அவர் மெனக்கெடாததால் கட்சி தோல்வியடைந்தது. இரட்டைத்தலைமை இருந்த போது காழ்ப்புணர்ச்சியில் பலரை கட்சியிலிருந்து நீக்கினார். இது குறித்து அப்போது தலைமையிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ் மூலமாக நீக்கியுள்ளதாக தெரிவித்தார்கள், அப்பவே நான், கட்சிக்கு ஒற்றைத்தலைமை தான் நல்லது என்றேன். எதிரிகள் ஒருபக்கம், துரோகிகள் ஒரு பக்கம் இருந்தும் 75 சீட் வெற்றி பெற்றதற்கு பொதுச்செயலாளர் பிரசாரமும், வியூகமும் தான் காரணம்.

வைத்திலிங்கம்

2026 தேர்தலிலும் இது போல் செயல்பட வேண்டும். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரில் அவரால் ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தன்னை ஆளுமையாக காட்டிக்கொள்கிற அவருக்கு செல்வாக்கு இல்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டத்தை காட்டுவார் என நம்பக் கூடாது. வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது தேவையில்லாதது, அவர் கட்சிக்கு தேவையில்லை' என சிலர் தங்களின் கருத்துகளை எடுத்து வைத்திருக்கிறார்கள். மற்றொரு தரப்பினரோ, வைத்திலிங்கம் கட்சியில் சேருவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, `வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. கட்சி அலுவலகத்தை சேதப்படுத்துவதற்கு மூளையாக செயல்பட்ட அவரை கட்சியில் சேர்ப்பதற்கான எண்ணம் இல்லை. தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படும் நான், அவர்கள் கருத்தை கேட்டு தான் எதுவாக இருந்தாலும் செய்வேன்' என பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் தரப்பினரிடம் இது குறித்து பேசியபோது, ``மா.சேகர், ராஜமாணிக்கம் சரவணன் போன்றவர்கள் வைத்திலிங்கம் கட்சிக்கு தேவையில்லை என பேசியுள்ளனர். வைத்திலிங்கம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் அவர், அவர்களை ஓரம்கட்டுவார் என்ற எண்ணத்தில் கட்சி வலுவடையும் என்பதை பார்க்காமல் தனிப்பட்ட சுயநலத்திற்காக தங்களுடைய பதவிக்காக இது போல் பேசுகின்றனர்." என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist