காவிரி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டமும்... 3 முக்கிய தீர்மானங்களும்!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவின்படி, ஜூலை 12 முதல் 31 வரை தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் திறந்துவிடப்பட வேண்டிய ஒரு டி.எம்.சி காவிரி நீரை கர்நாடக காங்கிரஸ் அரசு முடியாது என மறுத்துவருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு தி.மு.க அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடத்தியது.காவிரி விவகாரம்தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின்அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்த முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.காவிரி விவகாரம் - அனைத்துக் கட்சி கூட்டம்காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின் உச்ச நீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.`இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா?' - நா.த.க நிர்வாகி படுகொலையில் சீமான் கேள்வி!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவின்படி, ஜூலை 12 முதல் 31 வரை தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் திறந்துவிடப்பட வேண்டிய ஒரு டி.எம்.சி காவிரி நீரை கர்நாடக காங்கிரஸ் அரசு முடியாது என மறுத்துவருகிறது. இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு தி.மு.க அரசு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடத்தியது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துகளை இங்கு நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடித்தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வாசித்த முதல்வர் ஸ்டாலின், ``காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின் உச்ச நீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
What's Your Reaction?