`புத்தகத்தில் மாணவனின் சாதிப் பெயர்' - அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை வழக்கு

திருப்பத்தூர் அடுத்துள்ள கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ம் தேதி, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு `இசைக்கருவிகள்’ குறித்துப் பாடம் எடுத்திருக்கிறார் ஆசிரியர் விஜயகுமார். அப்போது, இசைக் கருவிகளின் கீழே வயலின், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் எனப் பெயர்களைக் குறிப்பிட்டு பாடப் புத்தகத்தில் எழுதிக்கொடுத்த ஆசிரியர் விஜயகுமார் ``இந்த இசைக் கருவிகளைக் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இசைப்பார்கள்’’ எனவும் வகுப்பில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையும் ஆசிரியரே எழுதியதாகக் கூறப்படுகிறது. புத்தகத்தில் சாதிப் பெயர் எழுதப்பட்டதைத் தனது பெற்றோரிடம் அந்த மாணவன் காண்பித்திருக்கிறான். அரசுப் பள்ளிஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் கேள்வியெழுப்பியதாகவும், அதற்கு ஆசிரியர் உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவனின் பெற்றோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் நவநீதம் மற்றும் கந்திலி போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் விஜயகுமாரை `சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோடி. இதையடுத்து, கந்திலி போலீஸாரும் ஆசிரியர் விஜயகுமார் மீது எஸ்.சி - எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nov 27, 2024 - 16:24
 0  8
`புத்தகத்தில் மாணவனின் சாதிப் பெயர்' - அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வன்கொடுமை வழக்கு
திருப்பத்தூர் அடுத்துள்ள கந்திலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் விஜயகுமார் என்பவர் ஆங்கிலப் பாட ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15-ம் தேதி, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு `இசைக்கருவிகள்’ குறித்துப் பாடம் எடுத்திருக்கிறார் ஆசிரியர் விஜயகுமார். அப்போது, இசைக் கருவிகளின் கீழே வயலின், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் எனப் பெயர்களைக் குறிப்பிட்டு பாடப் புத்தகத்தில் எழுதிக்கொடுத்த ஆசிரியர் விஜயகுமார் ``இந்த இசைக் கருவிகளைக் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இசைப்பார்கள்’’ எனவும் வகுப்பில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையும் ஆசிரியரே எழுதியதாகக் கூறப்படுகிறது. புத்தகத்தில் சாதிப் பெயர் எழுதப்பட்டதைத் தனது பெற்றோரிடம் அந்த மாணவன் காண்பித்திருக்கிறான்.

அரசுப் பள்ளி

ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் கேள்வியெழுப்பியதாகவும், அதற்கு ஆசிரியர் உரிய பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவனின் பெற்றோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோட்டி, தாசில்தார் நவநீதம் மற்றும் கந்திலி போலீஸார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகே, போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், ஆசிரியர் விஜயகுமாரை `சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியக்கோடி. இதையடுத்து, கந்திலி போலீஸாரும் ஆசிரியர் விஜயகுமார் மீது எஸ்.சி - எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist