திருவொற்றியூர் தனியார் பள்ளி வாயுக்கசிவு விவகாரம்: மாணவர் மயக்கத்துக்கு முயல்களே காரணம்
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.
சென்னை: சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து தனியார் பள்ளி கடந்த நவ.4-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதும் சில வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 பேர் வரை மயங்கியதால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 4 நாட்கள் காற்றுத்தர பரிசோதனை ஆய்வு நடத்தினர். அதில் வாயுக் கசிவுக்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் ஆய்வறிக்கையையும் அதிகாரிகள் அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?