‘தலைவனே!’ - ஆர்சிபி கேப்டன்சி ரோலுக்கு பொருந்துவாரா ரஜத் பட்டிதார்? - ஓர் அலசல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை வெல்லும் வாய்ப்பு ‘வெகு தொலைவிலும் இல்லை, அருகிலும் இல்லை’ என்ற நிலைதான் அந்த அணிக்கு. 2025 ஐபிஎல் சீசனில் அந்த நிலை மாறி கோப்பை வெல்லும் கனவு மெய்ப்படும் என ஆர்சிபி அன்பர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
What's Your Reaction?






