ட்ரம்ப்பை கொல்ல முயற்சி: ஈரானுக்கு தொடர்பு?
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது. எனினும் அவர் தப்பிவிட்டார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது. எனினும் அவர் தப்பிவிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ் தான் நாட்டைச் சேர்ந்த பர்ஹத் ஷகேரி (51), டொனால்டு டிரம்பைகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அதில் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இதன் பின்னணியில் ஈரா னிய இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி) உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?