சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

Nov 12, 2024 - 12:39
 0  2
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்

சென்னை: இந்தியாவின் வலுவான கிளாசிக்கல் செஸ் போட்டியான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது பதிப்பு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கடைசி மற்றும் 7-வது சுற்றில் முதல் போர்டில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 15-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சரானா, இந்தியாவின் விதித் குஜ்ராத்தியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist