தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது

Nov 12, 2024 - 12:39
 0  2
தேசிய சீனியர் ஹாக்கி போட்டி: ஹரியானா, மணிப்பூர் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹரியானா 8-0 என்ற கோல் கணக்கில் மிசோரம் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ரோஹித் 4 கோல்களையும் ரஜிந்தர் சிங், ஜோகிந்தர் சிங், பர்தீப் சிங், அமித் சாஹல் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

ஹரியானாவுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist