இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: நவம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு
இலங்கையில் நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடைய 10 மாதங்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ராமேசுவரம்: இலங்கையில் நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடைய 10 மாதங்கள் உள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் (ஜேவிபி) தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். திங்கட்கிழமை அதிபராக பதவியேற்றக் கொண்ட அநுர குமார திசாநாயக்க, நேற்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரியவை இடைக்கால பிரதமராக பதவியில் அமர்த்தினார்.
What's Your Reaction?