அரை இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்

கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் உலகின் 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை, இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோற்கடித்தார்.

Jul 8, 2024 - 22:17
 0  2
அரை இறுதி சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்

கால்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் உலகின் 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை, இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தோற்கடித்தார்.

கனடாவின் கால்கரி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்செனை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 21-11, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist