`அரசியலமைப்பு படுகொலை தினம்‘ - எமர்ஜென்சியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் பாஜக பிளான்தான் என்ன?!

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் (எமர்ஜென்சி) செய்யப்பட்ட ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) என்று அனுசரிப்பதென்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்பாணைமத்திய அரசின் அரசிதழில் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணையில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, அரசால் அதிகார அத்துமீறல்களும், இந்திய மக்களுக்கு எதிராக கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.மேலும், ‘அரசியலமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் உறுதியான நம்பிக்கையை இந்திய மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில், அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்திய மக்கள் இத்தகைய அதிகார அத்துமீறல்களை எந்த வடிவத்திலும் ஆதரிக்கக்கூடாது என்று உறுதியேற்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமித் ஷாமத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை தனது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டிருக்கிறார். அதில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். இதன் மூலமாக, ஜனநாயகத்தின் ஆன்மாவை அவர் நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைபிடிப்பதென்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.‘அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வோர் இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள் அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்’ என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.பிரதமர் மோடி பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எமர்ஜென்சியை இதுவரை விமர்சித்துதான் வந்தனர். இப்போது, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்று இந்திய அரசே அனுசரிக்கும் என்று அறிவித்துவிட்டார்கள். இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.‘மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க-வின் ஆட்சியே எமர்ஜென்சி காலம்தான்’ என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடி வருகிறார்கள். எமர்ஜென்சியை பா.ஜ.க-வினர் எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார்கள் என்றாலும், இப்போது அந்த விவகாரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதில், ‘இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மனுஸ்மிருதியை நாட்டின் அரசியல் சட்டமாகக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது’ என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரசாரம், இப்போது எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க பெரிதாக்குவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றிவிடுவார்கள்’ என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார். தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் எழுப்பின. ஆகையால், இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, அரசியல் சாசனம் குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. 13 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல்... இந்தியா கூட்டணி ‘ஆதிக்கம்’ சொல்லும் செய்தி என்ன?!அதைத் தொடர்ந்து எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க எழுப்பியது. இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது என்று என்று பா.ஜ.க தலைவர்கள் பேசினர்.அதற்கு, ‘எமர்ஜென்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அவ்வளவுதான். ஆனால், பத்தாண்டு கால மோடி ஆட்சியில் அரசை விமர்சித்த பேராசிரியர்களும், எழுத்தாளர்களும, வழக்கறிஞர்களும், செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் உபா போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் சிறையில் கொடுமைக்கப்படுத்தப்பட்டார்கள். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இது எமர்ஜென்சியைவிட கொடுமையானது’ என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்கத் தொடங்கின.மோடிஇந்த நிலையில்தான், ‘எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் திசைதிருப்பும் நோக்கத்துடன், 50 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சியை இப்போது மிகப்பெரிய விவகாரமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

Jul 17, 2024 - 11:01
 0  3
`அரசியலமைப்பு படுகொலை தினம்‘ - எமர்ஜென்சியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் பாஜக பிளான்தான் என்ன?!

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அவசர நிலைப் பிரகடனம் (எமர்ஜென்சி) செய்யப்பட்ட ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) என்று அனுசரிப்பதென்று மத்திய பா.ஜ.க அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்பாணை

மத்திய அரசின் அரசிதழில் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணையில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது, அரசால் அதிகார அத்துமீறல்களும், இந்திய மக்களுக்கு எதிராக கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், ‘அரசியலமைப்பு மீதும், ஜனநாயகத்தின் மீதும் உறுதியான நம்பிக்கையை இந்திய மக்கள் வைத்திருக்கிறார்கள். ஆகவே, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில், அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்திய மக்கள் இத்தகைய அதிகார அத்துமீறல்களை எந்த வடிவத்திலும் ஆதரிக்கக்கூடாது என்று உறுதியேற்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா

மத்திய அரசின் இந்த அறிவிப்பாணையை தனது எக்ஸ் தள பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டிருக்கிறார். அதில், ‘1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக அவசரநிலையைப் பிரகடனம் செய்தார்.

இதன் மூலமாக, ஜனநாயகத்தின் ஆன்மாவை அவர் நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைபிடிப்பதென்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

‘அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வோர் இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள் அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்’ என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எமர்ஜென்சியை இதுவரை விமர்சித்துதான் வந்தனர். இப்போது, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என்று இந்திய அரசே அனுசரிக்கும் என்று அறிவித்துவிட்டார்கள். இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

‘மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க-வின் ஆட்சியே எமர்ஜென்சி காலம்தான்’ என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடி வருகிறார்கள். எமர்ஜென்சியை பா.ஜ.க-வினர் எப்போதுமே விமர்சித்துவந்திருக்கிறார்கள் என்றாலும், இப்போது அந்த விவகாரத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதில், ‘இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மனுஸ்மிருதியை நாட்டின் அரசியல் சட்டமாகக் கொண்டுவர பா.ஜ.க முயல்கிறது’ என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரசாரம், இப்போது எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க பெரிதாக்குவதற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், அரசியல் சாசனத்தை மாற்றிவிடுவார்கள்’ என்று தொடர்ச்சியாகப் பேசிவந்தார். தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்தில் எழுப்பின. ஆகையால், இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு, அரசியல் சாசனம் குறித்து விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து எமர்ஜென்சி விவகாரத்தை பா.ஜ.க எழுப்பியது. இந்திரா காந்தியால் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது, அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டது என்று என்று பா.ஜ.க தலைவர்கள் பேசினர்.

அதற்கு, ‘எமர்ஜென்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அவ்வளவுதான். ஆனால், பத்தாண்டு கால மோடி ஆட்சியில் அரசை விமர்சித்த பேராசிரியர்களும், எழுத்தாளர்களும, வழக்கறிஞர்களும், செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் உபா போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் சிறையில் கொடுமைக்கப்படுத்தப்பட்டார்கள். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. இது எமர்ஜென்சியைவிட கொடுமையானது’ என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுக்கத் தொடங்கின.

மோடி

இந்த நிலையில்தான், ‘எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் திசைதிருப்பும் நோக்கத்துடன், 50 ஆண்டுகளுக்கு முந்தைய எமர்ஜென்சியை இப்போது மிகப்பெரிய விவகாரமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist