விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ டீசர் எப்படி? - காதலும், பிரிவும்! 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Sep 26, 2024 - 09:48
 0  12
விஷ்ணுவர்தனின் ‘நேசிப்பாயா’ டீசர் எப்படி? - காதலும், பிரிவும்! 

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி, ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி?: கிட்டத்தட்ட அதர்வாவின் உடல்மொழியையும், குரலையும் நினைவூட்டுகிறார் அவரது தம்பி ஆகாஷ் முரளி. முழுப்படமும் காதலை மையமாக கொண்டு உருவாகியிருப்பதை டீசர் உணர்த்துகிறது. அதீத மேக்அப் தாண்டி அதிதி ஷங்கர் கவனம் ஈர்க்கிறார். “என் பிரண்ட்ஸ் எல்லோரும் மன நோயாளிகள் தான்” என்ற வசனம் நெருடல். வழக்கமான காதலும், தொடர்ந்து வரும் ஆக்ஷனும், பிரிவும், வெளிநாடு ஸ்டன்ட் காட்சிகளும் டீசரில் இடம்பெற்றுள்ளன. சரத்குமார், குஷ்பூ ஒரு ஃப்ரேமில் தலைகாட்டி செல்கின்றனர். டீசரில் புதிதாக எதையும் காண முடியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist