வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம்: சொல்கிறார் ரோஹித் சர்மா
சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது
சென்னை: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: வலுவான பந்துவீச்சு கொண்ட அணியை உருவாக்க விரும்புகிறோம், நிலைமைகள் எதுவாக இருந்தாலும் எதிர்கொள்ள நாங்கள்தயாராக இருக்க வேண்டும். நிலைமைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் இந்தியாவில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும், அதற்கு தகுந்தவாறு அணியை உருவாக்க விரும்புகிறோம்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் விரும்பிய முடிவைபெற்றுள்ளோம். ரிஷப் பந்த் சில கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார். அந்த கடினமான காலங்களில் அவர் தன்னை நிர்வகித்த விதம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. அவர், ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்தார், அதைத் தொடர்ந்து டி 20உலகக் கோப்பையில் பங்கேற்ற ரிஷப் பந்த்தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிஉள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை அவர், மிகவும் நேசிக்கிறார்.
What's Your Reaction?