‘கோட்’ 2050-ல் நடக்கும் கதையா?
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘கோட்’ (தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்). இதில் மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய்யின் 50-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதை ‘டிகோடிங்’ (decoding) செய்துள்ள நெட்டிசன்கள், டைம் டிராவல் பின்னணியை கொண்ட இந்தப் படத்தின் கதை 2050-ல் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?