கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ஷாருக்கான்
அவசர கண் அறுவை சிகிச்சைக்காக நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை: அவசர கண் அறுவை சிகிச்சைக்காக நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜானே ஜான்’ படத்தை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாருக்கான். இந்தப் படத்துக்கு ‘கிங்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார் ஷாருக்கானின் மகள் சுஹானா. மேலும் அபிஷேக் பச்சன் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நடிகர் ஷாருக்கான் அவசர கண் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?