வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும் இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டை வழிநடத்தி வரும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற முகமது யூனுஸ் பின்னர் பேசும்போது, "இந்தியாவுடன் வங்கதேசத்துக்கு பிரச்சினைகள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர்களின் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.
What's Your Reaction?







