வங்கதேச எம்.பி கொலையில் நடந்தது என்ன? - காவல் துறை வெளியிட்ட பகீர் பின்னணி
வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் அன்வர் கொலையில் பல்வேறு பகீர் தகவல்களை கொல்கத்தா குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா: வங்கதேச எம்.பி. அன்வருல் ஆசிம் அன்வர் கொலையில் பல்வேறு பகீர் தகவல்களை கொல்கத்தா குற்றப் புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை விஞ்சும் அளவுக்கு எம்.பி.யை வலையில் சிக்கவைத்து இந்தக் கொலை நடந்துள்ளது. இந்தக் கொலைக்காக ரூ.5 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்கத்தாவில் கொலை செய்யட்ட அன்வரின் உடலில் இருந்து தோல் உரிக்கப்பட்டு, எலும்புகள் நொறுக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்டு அவை நகர் முழுவதும் பல இடங்களில் வீசப்பட்டன என்று காவல் துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?