ராகுலைப் புகழ்ந்து பதிவிட்ட செல்லூர் ராஜூ; அதிமுக முகாமில் சலசலப்பு... பின்னணி என்ன?

"நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று, ராகுல்  காந்தியின் படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ளது அ.தி.மு.க-வில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செல்லூர் ராஜூஅமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதும் சரி கட்சி கூட்டத்திலும், செய்தியாளர் கூட்டத்திலும் அதிரடியாக எதையாவது பேசி மட்டுமல்ல, தெர்மாகோல் விடுவது போன்ற செயலாலும் பரபரப்பை உண்டுபண்ணியவர் செல்லூர் ராஜூ என்பது அனைவருக்கும் தெரியும்.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வில் தென்மாவட்ட தளகர்த்தாவாக இருந்துவரும் செல்லூர் ராஜூவுக்கு சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியுடன் லடாய் என்று சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக-வில் தலைமையை மாற்றவேண்டும் என்று கிளம்பியுள்ள அணியில், செல்லுர் ராஜூ இருப்பதாக சொல்லப்படுகிறது.செல்லூர் ராஜூ - ராகுல் காந்திஇந்நிலையில் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக 'மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்று ஏற்கெனவே இவர் பேசியதும் சர்ச்சையானது. ' எம்.ஜி.ஆரைப் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைப்பவர் நடிகர் விஜய்' என பேசி அதிர வைத்தார். இப்படி அடிக்கடி அதிரடியாகப் பேசி வந்த செல்லூர் ராஜூ, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசிக்கும் இளம் தலைவர்' என்று ராகுல் காந்தியின் படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கெனவே தி.மு.க அமைச்சர்களையும், நடிகர் விஜய்யையும் பாராட்டி பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டதற்கு எதிராக அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்டுள்ள நிலையில், போட்டிக் கட்சியின் தலைவரை புகழ்ந்து பதிவிட்டது, அதிமுக தலைமையை மேலும் கோபம் கொள்ள வைத்துள்ளது.செல்லூர் ராஜூ``மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ராகுல் காந்தி பிரதமராவார் என்று கணித்து, எதற்கும் இருக்கட்டும் என்று முன்கூட்டியே துண்டு போடுகிறார்" என்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் பேசி வருகிறார்கள். இது குறித்து செல்லூர் ராஜூ தரப்பில் விசாரித்தபோது, "ராகுலின் எளிமைக்காக சாதாரணமாக போட்ட பதிவுதான், வேறு ஒன்றுமில்லை'' என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், செல்லூராரின் பதிவு கட்சிக்குள் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppbஅதிமுக தலைமைப் போட்டி மீண்டும் சூடு பிடிக்கிறதா? - உள்ளரசியலின் பின்னணி என்ன?!

May 21, 2024 - 17:29
 0  2
ராகுலைப் புகழ்ந்து பதிவிட்ட செல்லூர் ராஜூ; அதிமுக முகாமில் சலசலப்பு... பின்னணி என்ன?

"நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று, ராகுல்  காந்தியின் படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ளது அ.தி.மு.க-வில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லூர் ராஜூ

அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதும் சரி கட்சி கூட்டத்திலும், செய்தியாளர் கூட்டத்திலும் அதிரடியாக எதையாவது பேசி மட்டுமல்ல, தெர்மாகோல் விடுவது போன்ற செயலாலும் பரபரப்பை உண்டுபண்ணியவர் செல்லூர் ராஜூ என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வில் தென்மாவட்ட தளகர்த்தாவாக இருந்துவரும் செல்லூர் ராஜூவுக்கு சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமியுடன் லடாய் என்று சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுக-வில் தலைமையை மாற்றவேண்டும் என்று கிளம்பியுள்ள அணியில், செல்லுர் ராஜூ இருப்பதாக சொல்லப்படுகிறது.

செல்லூர் ராஜூ - ராகுல் காந்தி

இந்நிலையில் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக 'மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்று ஏற்கெனவே இவர் பேசியதும் சர்ச்சையானது. ' எம்.ஜி.ஆரைப் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைப்பவர் நடிகர் விஜய்' என பேசி அதிர வைத்தார். இப்படி அடிக்கடி அதிரடியாகப் பேசி வந்த செல்லூர் ராஜூ, 'நான் பார்த்து நெகிழ்ந்து ரசிக்கும் இளம் தலைவர்' என்று ராகுல் காந்தியின் படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தி.மு.க அமைச்சர்களையும், நடிகர் விஜய்யையும் பாராட்டி பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டதற்கு எதிராக அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிட்டுள்ள நிலையில், போட்டிக் கட்சியின் தலைவரை புகழ்ந்து பதிவிட்டது, அதிமுக தலைமையை மேலும் கோபம் கொள்ள வைத்துள்ளது.

செல்லூர் ராஜூ

``மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ராகுல் காந்தி பிரதமராவார் என்று கணித்து, எதற்கும் இருக்கட்டும் என்று முன்கூட்டியே துண்டு போடுகிறார்" என்று திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் பேசி வருகிறார்கள்.

இது குறித்து செல்லூர் ராஜூ தரப்பில் விசாரித்தபோது, "ராகுலின் எளிமைக்காக சாதாரணமாக போட்ட பதிவுதான், வேறு ஒன்றுமில்லை'' என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால், செல்லூராரின் பதிவு கட்சிக்குள் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist