உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

Sep 30, 2025 - 10:59
 0  11
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு: 2 மணி நேரப் பயணம் 2 நிமிடத்தில் நிறைவடைகிறது

குய்சோ: உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது. சீனா​வின் குய்சோ மாகாணத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலம் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தப் பாலத்​துக்கு ஹுவாஜி​யாங் கிராண்ட் கன்​யான் பாலம் என்று பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது. தரை மட்​டத்​திலிருந்து 625 மீட்​டர் உயரத்​தில் இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது.

இரு மலைகளை இணைக்​கும் வித​மாக இந்​தப் பாலம் மிக​வும் அழகுட​னும், சிறப்​பாக​வும் அமைந்​துள்​ளது. இது​வரை இப்​பகு​தி​யைக் கடக்க 2 மணி நேரம் எடுத்​துக்​கொண்ட நிலை​யில் தற்​போது பாலத்​தின் உதவி​யால் இரண்டே நிமிடத்​தில் இப்​பகு​தி​யைக் கடந்து விட முடி​யும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist