“யுவராஜ் சிங் பெருமை அடைந்தார்” - சதம் விளாசிய அபிஷேக் சர்மா
தனது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் போட்டியில் டக் அவுட் ஆனார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா. இரண்டாவது போட்டியில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம் தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹராரே: தனது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் போட்டியில் டக் அவுட் ஆனார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா. இரண்டாவது போட்டியில் சதம் விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம் தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்குக்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்களில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. இதற்கு முக்கிய காரணம் இளம் வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம். 46 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அவரது இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இதில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்று இருந்தார்.
What's Your Reaction?